உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

137

ஏழைத் தந்தையினிடம் அவன் மகன் 'அப்பா ஏழு சட்டை வேண்டும்' என்று அடம் பிடிக்கிறான்! தந்தையினிடம் காற் பணம் கூட இல்லை. இருந்தாலும் 'ஏழு என்னடா ஒன்பது தைப்போம்' என்கிறான்! இது பொய் தானா?

உன் முகம் குரங்கைப் போலவே இருக்கிறது; கொஞ்சம் கூட மாற்றமில்லை என்று கன்னமும் கண்ணும் குழிந்த ஒருவனை ஒருவன் கூறுகிறான். உண்மை உரைக்கிறான் என்று உவப்பால் அணைத்துக் கொள்வானா 'குரங்கு மூஞ்சி'யன்?

நாள் தவறாமல் தெருத்தோறும் அலைந்துதிரிந்து பண்டமாற்றுச் செய்யும் ஒருவனை 'நீ நாய் போல் அலைகிறாய்' என்றால் உண்மை என்று ஏற்றுக் கொண்டு அன்பு மழை பொழிவானா?

மக்களைச் சாகக் கொடுத்த ஓரன்னை மனம் நைந்து நொந்து மெலிந்து ஒடுங்கிப் போக, நாள் செல்லச் செல்ல மற்றவர்கள் தேற்றுதலும், மற்றைப் பிள்ளைகளின் நல்வாழ்வும் கருதிச் சற்றே தேறியிருந்த பொழுதில் ஒருத்தி வந்து “அடியே

முகில்