138
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
அம்மா! பிள்ளையைச் சாகக் கொடுத்தவள் போலாகவா இருக்கிறாய்? கொழு கொழு என்று இருக்கிறாயே” என்று அவளிடமே உண்மை சொன்னால் அதற்கு மேல் எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பாள்?
66
உ
'காலை வெட்டி விடுவேன்” என்று ஒருவன் தன் கோபத்தில் பகைவனைப் பற்றிப் பேசி விடுகின்றான். இதனைக் கேட்ட ஒருவன் தாங்க மாட்டாமல் பகைவனிடம் போய்ச் சொல்லி டுகின்றான். கத்தியை எடுத்துக் கொண்டு கடுகடுப்புடன் வருகின்றான் பகைவன். அவ்வேளையில் ஒருவன் அவன் முன் போய், "நீ சொல்பவன் பேச்சைக் கேட்டுக் கெட்டுப் போகாதே. நானும் கூடஇருந்தேன். அவன் என்ன சொன்னான், “எங்களுக்குள் எப்படியோ பகை ஏற்பட்டு விட்டது, இது கூடவே கூடாது, அவன் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டாவது பகையை விட் விட வேண்டும்" என்றான்! உன் காலை வெட்டுவதாகவா கூறினான்?' என்று இடை நின்று தடுத்து விடுவது தவறா? பிரிந்தவர்களை ஒன்று படுத்துவது குற்றமா? அதற்குச் சிறிது மாற்றிச் சொல்லுவது பொய்யா?”
வள்ளுவர் கூறினார்: "அன்பா! நீ கேட்பது சரிதான். உள்ளதை உள்ளவாறு சொன்னால் நன்மை விளைவதுதான் மிகுதி. சிற்சில இடங்களில் தீமை விளையும் என்று தெளிவாகத் தெரியுமானால் அவ்விடங்களில் மட்டும் உள்ளதை உள்ளவாறு கூறாமல் இருக்கலாம்; சற்று மாற்றியும் கூறலாம். இத்தகைய இடங்களிலெல்லாம் அணுவளவும் கூறுபவனது நன்மை கருதியதாக உரை இருக்கவே கூடாது. அவ்வாறு இருக்குமெனின் அது பொய்மையினும் மாபெரும் பொய்மையாகும். குற்றங்களிலெல்லாம் தலையாய குற்றமும் ஆகும். ஆனால் பிறர் நலங் கருதிச் சொல்லும் பொய்மை மட்டுமே அறிவுடையவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும். அவ்விடத்து மட்டும் அப்பொய்மை மெய்மையின் பயனாம் நன்மையைத் தரும் ஒரே ஒரு காரணத்தால் மெய்யாகக் கருதப்பெறலாம். ஆனால் அதுவும் மெய்யன்று! உரையை நோக்கப் பொய்யாம்; உளத்தையும், பயனையும் நோக்க மெய்யாம். அது கூடாது எல்லா இடங்களிலும் உள்ளது உள்ளவாறு கூறலே மெய்யென்று காட்டி உலகுக்குக் கேடு சூழ்வது மெய்யின் பெயரால் 'கொலை' செய்வதாகும். இந்நிலையில் மெய்மை செய்யும் கொலையையோ, கொடுமையையோ எண்ணி 'மெய் கொலைக்கு நிகர்' என்று காட்டுவது பொருந்துமா? பிறருக்குச் சிறிதளவும் தீமை பயக்காத சொல்லைச் சொல்லுவதே வாய்மை.