இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருக்குறள் கட்டுரைகள்
139
பொய்மையாக இருந்தால் கூட அது செய்யும் நன்மையைக் கருதிக் கருத்தளவிலே அதனை வாய்மை இடத்தில் நிறுத்தி நடிக்க விட்டாலும் குற்றமாகாது.
இதுவரை கேட்டுக் கொண்டிருந்தவன், "சொல்லைக் கொண்டு இது பொய், இதுமெய் எனப் பிரித்து இடர்களுக்கு ஆளானேன். சொல்லின் பயனை நோக்கித்தான் பொய், மெய் அறியவேண்டும் என ன்று அறிந்துகொண்டேன்" என்று முழங்கினான்.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.
பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.
என்று கூறி, நடந்தான்! நடந்தது பாதை வழியில் இல்லை! வாழ்க்கை வழியில்!