உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

147

வைக்கும் உள்ளமில்லாதவர்கள் நட்பு இல்லாது ஒழிக! வலிய பன்றி, இடப்பக்கத்தே வீழ்ந்தது கருதி, அன்று அவ்விடத்து உண்ணாது போகி, மறுநாள் பெரியமலைப் பக்கத்தே யானையை வலம்பட வீழ்த்தியுண்ணும் புலியன்ன கொள்கையுடையவர்களோடு பொருந்தி வாழும் நாட்கள் உண்டாவதாக!” என்ன அருமையான கொள்கை! இக்கொள்கையை வகுத்துக்காட்டிய புலவன் யாவன்? பாவேந்தனும் கோவேந்தனுமாகத் திகழ்ந்த சோழன் நல்லுருத்திரன் அவன்! புறநானூற்றில் ஒளி விடுகின்றது இவ்வொள்ளிய பா!

நாகரிகம் என்பது என்ன? உடுப்பதிலே உண்பதிலே, உபயோகிக்கும் பொருள்களிலே, உரையிலேயா அடங்கிக் கிடக்கிறது. காலந்தோறும் இடந்தோறும் வேற்றுமையுறும் வை நாகரிகமாகா! நாகரிகம் உள்ளத்தைப் பொறுத்தது! எந்நாளும் மாற்றமில்லாத் தன்மையது! ஆம்! உயர் கோட் பாடுகளே நாகரிகம்! எஞ்சிய வெல்லாம் போலி நாகரிகம்! ‘நண்பர்கள் முன்வந்து நஞ்சைத் தந்தாலும் சிறிய வேற்றுமையுணர்வும் இல்லாது உண்பதே நாகரிகம்! என்றுரைக்கும் பண்டைத் தண்டமிழ்ச் சான்றோர்களின் ஒருமித்த முடிவில் ‘உயர் கோட்பாடே நாகரிகம், என்னுங் கருத்து இலங்குதலை உன்னுக!

பழங்கால வீரன் ஒருவன் போர்க் களம் சென்றான். ஆங்கு யானை ஒன்று அவனைத் தாக்குமாறு வெறிகொண்டு வந்தது. அவனோ, அஞ்சினான் இல்லை. எதிர் வந்து தாக்க முனைந்த போதும் தாக்கினான் இல்லை. அமைதியாக நின்றுகொண்டு

66

வ்யானையின் வீரமோர் வீரமோ? எதிரி தாக்க முனை யாதிருந்தும் ஊக்கமாகத் தாக்க வரும் இது வீரம் உடைத்து அன்று! விலங்குக்கு அதன் இயல்பு போகுமா?" என்ற புன் முறுவல் பூத்து நின்றான். அடுத்திருந்த ஒரு வீரன் கேட்டான் “நீ ஏன் யானையைத் தாக்காமல் பார்த்து நிற்கிறாய்?” வீரன் கூறினான்:

66

இரண்டு கைகளையுடைய யான் ஒரு கையுடை யானையை வென்றாலும் வெற்றியாகுமோ? இணையான ஒன்றை எதிர்த்து வெல்லுவதே வெற்றி; வென்று பழி எய்துவதினும் தோற்பதே சிறப்பு" கேள்விகேட்ட வீரன் வாய் திறக்கவில்லை! என்ன கொள்கை பாருங்கள்!

யானை வீரன் குதிரை வீரனைத் தாக்கமாட்டான். குதிரை வீரன் காலாள் வீரனைத் தாக்கமாட்டான்; வில்வீரன் வேல் வீரனைத் தாக்கமாட்டான். வேல் வீரன் வாள் வீரனைத்