உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

155

உயர் நூலைப் படைத்தவன் எத்தகையன் ஆதல் வேண்டும்! அவனை அமரன் எனலாம்; சாவாத நூலைப் படைத்துள்ளவன் அவன் அல்லனோ! அதனால் அன்றே, 'சாவும் உடலைப் படைக்கும் நான்முகனினும், சாவா உடம்பாம் பாடலைப் படைக்கும் பாவலன் உயர்ந்தோன்' என நாலடி பாடுகின்றது. முதல் நூற் பெருமகன் தொல்காப்பியன் நூலாசிரியனைப் பற்றி யாதுரைக்கின்றான்? வினையின் நீங்கியவன்; விளங்கிய அறிவன்; முனைவன்; அவனே நூலாசான்; ஆம்;

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்.

என்றான்!

நூலின் பயன் என்ன? பலரும் பலவாறு கூறுப! எனினும் ஒன்றெனல் தகும்! 'நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு,'அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே' மரத்தின், கனக் கோட்டம் தீர்க்கும் நூல்போல் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு' இம்மொழி மணிகளால் நாம் பெறும் பொருள் பலவோ? ஒன்றே! நேர்படுத்துதல் அல்லது செம்மைப் படுத்துதல் என்பதே அது. செம்மையிலா ஒன்று அறிவு ஆமோ? வீடு ஆமோ? உள்ளம் ஆமோ?

மரத்தடி ஒன்றை அறுக்க வேண்டுமா? நூலடிக்கின்றனர். மனைவகுக்க வேண்டுமா? நூல் பிடித்துக் கோடிழுத்து, முளையடிக்கின்றனர்! நூல்மேல் நடத்தல் போல் நேராய் நட என்கின்றனர். நூல் போட்டு அமைக்காத ஓர் ஒழுங்கு இல்லவே இல்லை! நூல் போட்டு (கோடு போட்டு) அமைக்காது நேராய் எழுத இயல்வது இல்லை. நேராய் எழுதினாலும் 'நூல் போட்டு எழுதினால் போல் எழுதியுள்ளான்' என்று நூல் பெயர் போவது இல்லை. நூலின் செல்வாக்கை மட்டுமோ இவைகாட்டுகின்றன? ல்லை செம்மையையும் ஒருசேரக் காட்டுகின்றன அல்லவோ?

இத்தகைய நூலறிவினைப் பெற எத்துணைப் பேர்கள் என்னென்ன பாடுகள் பட்டுள்ளனர்; நாற்பது கல் தொலைவு நடையாக நடந்து சென்று, நூல் ஒன்று பெற்றுப் படித்து இன்புற்றார் அமெரிக்க நாட்டு ஆபிரகாம் லிங்கன்.

கண்ணொளியில்லா அந்தகக் கவி வீரராகவரும், மாம்பழக் கவிச்சிங்க நாவலரும் இலக்கிய இலக்கணக் கண்களைக் கொண்டு பேறு பெற்று நிலைத்தனர்! மனமே கற்பலகையாய், செவியே கண்ணாய்க் கற்றுத் தெளிந்தனர்!