162
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
அமைவது அரிது. மாறி அமைந்தால் வியப்புக்குரியது ஆகின்றது. காணாததைக் காணும்போது தானே வியப்பு ஏற்படுகிறது.
காற்றடைத்த பந்தைக் காண்கிறோம். ஒரு முள் குத்தினால் போதும். இருந்த காற்று முழுவதும் ஓட்டமெடுத்து விடும்! பந்தும் படுத்துவிடும்! ஓட்டை இருக்கும் அளவும், எவ்வளவு முயன்று அடைத்தாலும் காற்று நில்லாது! வாயை இறுக்கிக் கட்டிவிட்டாலும் காற்று நில்லாது! நின்றால் வியப்பு அல்லவா! பானையில் ஓட்டை விழுந்ததும் நீர் வெளிப்படாவண்ணம் இருந்தால் வியப்பே ஒழிய, வெளிப்படுவது வியப்பு ஆகாது.
மனித உடம்பில் ஒன்பது ஓட்டைகள் உள. என்றாலும் இவ் ஓட்டைக் குடிசைக்குள் உள்ள காற்று வெளியேறாவண்ணம் தங்கியிருப்பது தான் வியப்பு. அதனினும் வியப்பு, மற்றைக் காற்றைப்போல் தடுத்த நிறுத்த வேண்டாமல் போகவும்வரவும் விட்டுக் கொண்டிருந்தால்தான் தங்கி நிற்பது! மேலும் ஒரு வியப்பு. இக்காற்று (உயிர்) தன் வேலைப்பாடு முடிந்த உடன் என்ன முயற்சி செய்து நிறுத்தினாலும் கட்டுப்படாது. தான் குடியிருந்த வீட்டைக் காலி செய்துகொண்டு ஓடிவிடுவது! இவ்வியப்பைக் கண்டார் சிவப்பிரகாசர்.
"வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில் பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய் சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது வீதலோ? நிற்றல் வியப்பு!’
என்று பாடினார்.
99
அடுத்து இருந்தவர்களுக்குக் கேட்கும் அளவுக்குச் சத்தம் போட முடிகிறது. சற்றுத் தொலைவில் இருப்பவர்களுக்கு கேட்க வேண்டுமானால் 'கூப்பாடு' போடவேண்டியது உள்ளது. இத்தொலைவு கூப்பிடு தூரம் ஆயிற்று! என்ன கூப்பாடு போட்டாலும் எட்டாத் தாலை முற்காலத்தில் இருந்தது. ஆனால் இன்றோ, உலகின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு எளிதாகப் பேசவும், உடனுக்குடன் கேட்கவும் முடிகிறது! இது வியப்பு இல்லையா?
ஒரு சிறு பொருள் மறைத்துக் கொண்டாலும் ஒரு பெருமலையைக் கூடக் காண முடிவது இல்லை. பனிமால் இமய முகட்டைக் கூட இங்கிருந்து பார்க்க முடிவது இல்லை. நம் உடலுக்குள் உள்ள உறுப்புக்களை காண முடிவது இல்லை.