திருக்குறள் கட்டுரைகள்
163
ஆனால் இன்று தொலை நோக்காடி வழியாகவும், நுண் கதிர்கள் வழியாகவும் நேரிடையாகக் கண்டு களிக்கிறோம்; வியக்கிறோம்.
குருவி பறக்கும் வீட்டின்மேல், கொக்கு பறக்கும் அதற்கு மேல்; காக்கை பறக்கும் அதற்குமேல்; பருந்து பறக்கும் அதற்குமேல் என்று பறப்பதைக் கண்டான் மனிதன். நெடுங் காலம் ஓரடி உயரத்தில் கூட எழும்பி நிற்கமுடியாமல் இருந்தான். ன்றோ, கதிரோனுக்குக் கறுப்புப்புள்ளி வைக்கக்கூடிய அளவுக்குப் பறக்கின்றான்! இதனைக் கண்டு வியப்படையாமல் இருக்க முடியுமா?
இவைபோலவே ஒரு வியப்பு உண்டு. அழியும் உடல் உடையோம் நாம்; அழியும் செல்வம் உடையோம் நாம்! என்றாலும் அழியும் செல்வத்தைக் கொண்டே அழியும் உடலை, அழியாத வாழ்வில் வைத்துவிட முடியும்! இது பெருவியப்புக்குரியதுதான்! நெருப்பால் நெருப்பை அணைக்க முடியும், நீரால் நீரைத் தடுக்க முடியும், என்றால் எவ்வளவு வியப்போ அவ்வளவு வியப்புக்குரியதாக இருக்கிறது. இருந்தாலும் நடைமுறைக்கு ஏற்கக் கூடியதே இது.
நம் நாட்டையும் சரி, பிற நாடுகளையும் சரி ஆட்சி புரிந்து வந்த அரசர்கள் பலப்பலர். அவர்கள் அனைவரையும் நாம் இதுபோது அறிந்து கொண்டிருக்கவில்லை. அரசர்கள் நிலைமையே இத்தகையது என்றால் குடிமக்களை எந்த அளவில் அறிந்து கொள்ள முடியும்? என்றாலும், எல்லா அரசர்களையும் அறியாமல் போய் விட்டோமா? குடிமக்களுள் எவரையும் அறியாமல் போய்விட்டோமா? சிற்சில பேர்களை அறிந்து கொண்டிருக்கிறோம். எதனால்? வீரம், கொடை, அறிவு, முயற்சி, பண்பாடு, செயல் இவற்றில் தலைநின்ற காரணத்தால்! அவர்கள் மக்கள் மதிக்கும் பேறும், புலவர் பாடும் பேறும் எய்தினர். உலகில் நிலைத்தனர்.
முற்காலத்தில் புகழால் உலகில் மன்னியவர்களே (நிலைத் தவர்களே) மன்னர் ஆயினர். இதனை,
“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே.'
என்னும் பெருந்தலைச் சாத்தனார் அருமொழி நினைவூட்டும். குமணன் கொடைச் சிறப்பால் உலகில் நிலைபெற்று விட