உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

165

பச்சையப்பன் கல்லூரியும், அண்ணாமலைப் பல்கலைக் கழகமும், அழகப்பா கல்லூரித் தொகுதிகளும் இவர்கள் எழிலார்ந்த உடல்கள் அல்லவோ? இவ்வுடல்களகத்து எத் துணை எத்துணை ஆயிரம் ஆயிரம் வடிவங்கொண்டு பொலிவோடு திகழ்கின்றனர்! பல்லாயிரம் பல்லாயிரம் அறிஞர்களை, சான்றோர்களை பட்டதாரிகளை, பண்பாளிகளை உருவாக்கி இன்புறுத்தும் இனிய கனிச்சோலையாக இலங்குகின்றனர். அவர்களோ தமக்கென ஒன்றையும் கருதாது பிறர்க்கென அளித்து வாழ்ந்தனர். அதன் விளைவு என்ன? எல்லோர் இதயங்களையும் கொள்ளை கொண்டு விட்டனர்! இவர்களைக் கொள்ளைக்காரர்கள் என்பதா? இவர்கள் வழிபாட்டை ஏற்று எழிலோடு திகழும் கலைமகளே ஒரு கொள்ளைக்காரிதானே! 'கொள்ளை இன்பங் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத்து இருப்பவள்" அல்லளோ!

66

இதோ இன்றும் நடமாடும் தெய்வமணிகளாகத் திகழ் கிறார்களே பாண்டியர்களும், சோழர்களும்! இவர்கள் கட்டி வைத்த கோவில்கள், கோபுரங்கள், சிற்பங்கள் அனைத்தும் அவர்கள் வடிவங்கள் அல்லவோ! இவர்களுக்கு அழிவும்

உண்டா?

-

நாடகத்திற்கு படக்காட்சிக்கு - நடனத்திற்கு தெருக்கூத் திற்கு எப்படிக் கூட்டம் கூடுகிறது. ஒருவர் இருவராக! ஆனால் நிகழ்ச்சி முடிவுற்றதும் எப்படிக் கூட்டம் கலைகிறது? ஒரே மொத்தமாக. இப்படித்தானே செல்வம்அரிதாகச் சேர்ந்து எளிதாக ஒரே மொத்தமாக ஓடிவிடுகிறது. வெள்ளங் காக்கும் வீரனாலும் பணவெள்ளம் உடைத்துக்கொண்டு ஓடுவதைத் தடுத்து நிறுத்திவிட முடிவதில்லை. நிறுத்திக் காக்கும் வலிமை பெற்றவர்களே உண்மையான வீரர்கள்! நல்லறிவு வாய்ந் தவர்கள். பிற வீரர்கள் நடிகர்கள்!

செல்வம் நிலைக்காதது; வாழ்வோ அதனினும் நிலைக்காதது! ‘பெருக்காறு ஒத்தது செல்வம்'; 'பெருக்காற்று இடிகரை ஒத்தது இளமை'; 'இடிகரை வாழ்மரம் ஒத்தது வாழ்வு' - இப்படித் தெளிவு படுத்துகிறது ஒரு பாட்டு. இதனைத் தெளிவுப் படுத்துவானேன்? அதனையும் அப்பாடலே கூறுகின்றது.

‘ஒன்றே செய்யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும்; நன்றும் இன்றே செய்யவும் வேண்டும்; இன்றும்

இன்னே செய்யவும் வேண்டும்