174
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
'தேவைக்கு மேல் சேர்த்துவைப்பது திருட்டு' என் கிறார்கள். அப்படியானால் தேவையற்றவைகளைக் கொள்வது 'திருட்டுக்கு மூத்தது' என வேண்டும். ஏனென்றால், அவன் தேவையற்ற தேவைகள்தான் பொருட்களை நிரப்பிக் குவிக்கவும், பதுக்கி வைக்கவும் தூண்டுகின்றன. சேர்த்து வைப்பது குற்றம் என்றால், சேர்க்கத் தூண்டிய உணர்வே பெருங்குற்றம் ஆதல் வேண்டும்.
ஒரு பக்கம் தேவைக்கு இல்லாமை; இன்னொரு பக்கம் தேவைக்கு விஞ்சித் தேக்கம். இது என்ன செய்யும்? இதுதான் பொறாமை, போட்டி, களவு, வஞ்சம் அனைத்தையும் உரு வாக்கும். ‘ஆசை போலி ஆசை' எங்குக் கொண்டுபோய் விடுகின்றது?
முதலாவது, தேவையற்ற பற்றுக்களைக் கொண்டிருப்பது தனக்குத் துன்பம்; பின் அவன் வாழும் சமுதாயத்திற்கும் உலகுக்கும் துன்பம், இத்துன்பங்களை ஒழிக்க வழி தேவைகளைக் குறைப்பதே!
தேவையைக் குறைக்க அனைவராலும் இயலுவது இல்லை. மன உரமும், மனநலமும், மெய்யுணர்வும் உடையவர்க்கே எளிதாம். இவையற்றவர்களோ, மற்றவர்களைப் பார்த்துப் பார்த்துப் பழகிக் கெடுகிறார்கள். துன்பப் பிடியுள் நீக்கமறப் பிணைந்தும் விடுகிறார்கள். பற்றறுத்து வாழ்பவர்களே தாண்டர்களாக, துறவர்களாக, துறவிகளாக, அருளாளராக ஆகின்றனர். உலகுக்கும் வழிகாட்டுகின்றனர். தன் தேவையைக் குறைத்து அடக்கி வாழ முடியாதவர் பிறருக்காகப் பாடுபடும் பெருநெறியைக் கடைப்பிடிக்க முடியுமோ? அவர்கள் ஆசையை நிறைவேற்றவே பொழுது இல்லையே பிறருக்கு உழைக்க ஆசைப்பட முடியுமோ?
ஒன்றில் ஆசையை விடவேண்டுமானால் அதனினும் விஞ்சிய ஒன்றில் ஆசை செலுத்தவேண்டும். பொய் உணர்வின் ஆசையைத் தொலைக்கவேண்டுமாயின் மெய்யுணர்வில் நிலைக்கவேண்டும். ஒரு புலவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயம்பினார். திருப்பரங்குன்றத் திருமுருகன் முன்னிலையில் இயம்பினார். "கடம்பு மாலை அணிந்த பெரும! நின்னிடம் யான் வேண்டுவது பொன்னும் பொருளும் போகமும் அல்ல; அன்பும் அருளும் அறமும் ஆய ம் மூன்றுமே" என்றார். அழியும்