இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
176
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
உயிரின் அடையாளமாம் அன்பையும் விட்டு ஒழிக்க வேண்டிய நிலையே பற்றறுத்தல் எனின் அதன் அருமைப்பாடு பெரிதாம்! இந்நிலையுற்றார்க்கு இன்பம் ஏது? துன்பம் ஏது? ஆம்! அவரே இறைவனோடு இருந்தார்! வேண்டுதல் வேண்டாமை இல்லாமை கைக்கொண்டு, வேண்டுதல் வேண்டாமை இலான் அடியை எய்தினார்! பொய்யுணர்வு போக்கி மெய்யுணர்வில் தலைநின்றார்!
கீழ்வரும் குறள்களை நினைக்க! நெஞ்சில் பதிக்க!
“யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.”
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.”
"இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின்.'
99
“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்.”