உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கணையும் யாழும்

அம்பு நேரானது; அன்றியும் கூரானது; பெயர் பெறுவது. எனினும் அதன் செயல் எத்தகையது?

நேர் உடைமையால் விரைந்து செல்லும்; கூடாஉடைமையால் ஊடுருவித் தாக்கும். கண்ணுக்கு இணையான காட்சி வழங்கியும், கண்ணோட்டம் (இரக்கம்) என்னும் இரக்கம்) என்னும் ஒரு பொருளைத் தொலைக்கும்.

கணையின் தோற்றம் எப்படி? செயல் எப்படி?

யாழ் வளைவானது; கம்பாலும் குச்சிகளாலும் அமைந்தது; நரம்பும் தோலும் குறுக்கும் நெடுக்கும் பின்னிக் கிடப்பது; கவரும் அழகு அற்றது!

ஆனால், வல்லவன் ஒருவன் கையகப்பட்டு மீட்டப் படுமானால் கொடு விலங்கும் குளிரும்; நெடுந்தொலைப் பறவையும் நெருங்கும்; அறிவிலியும் தலையாட்டுவான்; அழுத பிள்ளையும் வாய் மூடும். இசை ஊற்றுப் பெருக்காகி உயிரகத்து இன்ப மதுவைப் பெருக்கும்! இத்தகைய, இசையே மாந்தரை இறைவனொடு

ணைக்கும்!

யாழின் வடிவு எத்தகையது? செயல் எத்தகையது?

கணையும் யாழும் மட்டுமோ தோற்றம் ஒன்றாகத் தொழில் ஒன்றாக இருக்கின்றன? இப்படி எத்தனை எத்தனைப் பொருள்கள், கருவிகள், மனிதர்கள்! சான்றாகக் காட்டப் பெற்றவை இவை அவ்வளவே!

-

மனிதருள் கணையுண்டு; யாழ் உண்டு; மிகுதியாக உண்டு. "வெளியே பார்த்தால் வெள்ளை; உள்ளே பார்த்தால் சொள்ளை" ஆளைக் கண்டு மயங்காதே ஊது காமாலை "ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம். உள்ளே பார்த்தால் ஈரும் பேனும்" இப்படியெல்லாம் வழங்கும் பழமொழிகள் எதைக் காட்டுகின்றன?