உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

185

எதிர்த்து நின்றோர்க்குப் பொறுமை மலையாகவும் திகழ்ந்த யேசு பெருமகனாரை முப்பது வெள்ளிக் காசுகளுக்காகக் காட்டிக்கொடுத்தான் யூதாசு!

புகழ் வளருவதையும், தூய்மை பெருகுவதையும், மனந் திரும்புதலையும் கண்டு கண்டு உள்ளம் வெதும்பி நல்லோனை ஒழித்துக்கட்ட நாட்பார்த்துக் கொண்டிருந்த பொல்லாத மாக்களிடம் சென்று “நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன்; நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?” என்று கேட்கின்றான். இயேசு பெருமானின் பன்னி ரு சீடர்களுள் ஒருவனாக இருந்து, செய்துவரும் நற்பணிகள் அனைத்தையும் உடனிருந்து அறிந்து இருந்த அந்தப் பொல்லாத யூதாசு!

66

66

'என் வேளை அண்மையில் இருக்கிறது;” என்னுயிர் இறப்புக்கு ஏதுவான பெருந்துயர் கொண்டு இருக்கிறது; 'மேய்ப்பன் வெட்டப்படுவான்; மந்தை ஆடுகள் சிதறப்படும். "மனித குமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படும் வேளை வந்தது” “இதோ என்னைக் காட்டிக் கொடுக்கிறவன் வந்துவிட்டான்" என்று பின்வருவதையெல்லாம் நன்றாக உணர்ந்திருந்த அப்பெருமகனார் தமக்கு நேரே இருக்கும் சிலுவைப்பாடு கருதிச் சிறிதும் துன்புற்றார் அல்லர்!

'உனக்கு இத்தனாம் நாள் இறப்பு' என்று ஒரு சோதிடன் ஒருவனுக்குச் சொல்லிவிட்டால் அதனைக் கேட்டவன் அந்நாள் வரை உயிரோடு இருப்பானா? எண்ணி எண்ணி நொடி நொடியாகச் செத்துக் கொண்டே வரமாட்டானா? சோதிடன் கூறியது பொய்யாகவே இருந்தாலும், இவனது நம்பிக்கையின் விளைவாம் துன்பத்தால் குறித்த நாளுக்கு முன்னாகச் செத்துவிடுவது ஏற்படக்கூடியதே. இவ்வாறு உயிரச்சம் உலகத்துள்ளோரிடத்து ஊறிக்கிடக்க இயேசு பெருமான் புன்முறுவலுடன் வரவேற்கின்றாரே! தாம் அடைய இருக்கும் சிலுவைப்பாடு துன்புக்குரியது என்று கருதியிருந்தால் அவ்வாறு பொறுத்துப் புன்முறுவலுடன் திகழ்வாரா?

இறைவனால் அனுப்பப் பெற்று, இறைவன் தொண்டொன்று கருதியே வாழ்ந்த அப்பெருமகனார் மேல், 'இறைவனை இகழ்ந்தார்” என்னும் குற்றச்சாட்டுச் சுமத்தப் படுகிறது; சிலுவையும் சுமத்தப்படுகிறது; அன்னை மரியாளுக்கும் அன்பர்களுக்கும் நகரோருக்கும் அழுகையும் கண்ணீரும் அன்பளிப்புக்களாகச் சுமத்தப்படுகின்றன என்றாலும், இயேசு பெருமகனாருக்குத் துன்பத்தைச் சுமத்திவிட முடிந்ததோ? இல்லையே! பிறருக்காக