உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

செய்கின்றார்கள்; இவர்களை மன்னியும்" என்று வேண்டிக் கொண்டார்! துன்பமாகக் கருதித் துடிக்கும் ஒருவர் உரை இவ்வாறு இருக்குமோ? எத்துணை அலறல்; ஏச்சு, ஏக்கம் கலந்திருக்க வேண்டும்?

இன்பம் துன்பம் இரண்டும் வெளியே இருந்து வருவன வல்ல! உள்ளேயே கிடக்கின்றன. இன்பத்தையும் துன்பமாகக் கருதி ஏங்கித் துடிப்பவர்களும் உண்டு. துன்பத்தையும் இன்ப மாகக் கருதி மகிழ்பவர்களும் உண்டு!

உலகுய்யவே உயிர் வாழ்ந்தார் இயேசு பெருமான்! உலகுய்யவே உதிரமும் கொட்டினார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசு என்ன பேறு பெற்றான்! பெற்ற பொருளோடு இன்பமாக வாழ்ந்தானா? வாழவிட்டதா நெஞ்சம்?

அறவோர் ஆட்சி செலுத்தியிருப்பாரானால் அக் கொடுமையாளனுக்கு உயிர்த் தண்டனை தந்திருப்பர். ஆனால் ஆட்சி அறவோர் கையில் இல்லை! யூதாசின் காட்டிக் கொடுத்தலைக் கொண்டு குற்றம் சாட்டிய கொடுமையாளர்கள் கூட்டணியும், குற்றம் இன்னதெனத் தீர்மானிக்கு முன்னரே 'கொலைத் தண்டனை' வழங்கவேண்டும் என்று பிடிவாதத்தில் இருந்த மதத் தலைவர்களும், அவர்கள் ஆட்டத்திற்கு ஏற்பவே ஆடிக்கொண்டிருந்த ஆட்சி பீடச் சுமைதாங்கிகளும் பெருகிக் கிடந்த அந்நிலைமையில் யூதாசுக்குத் தூக்குத் தண்டம் விதிப் போர் இருந்திருக்க முடியாது; இருப்பர் என எதிர்நோக்கவும்

கூடாது.

இந்நிலைமையிலும் யூதாசின் நெஞ்சம் விட்டுவைத்ததா?

இயேசு பெருமானுக்கு மரண தண்டனை கொடுக்கப் பட்டது அறிந்து மனம் வருந்தித், தன்னை ஏவிவிட்ட இழிவுடைத் தலைவர்களிடத்து விரைகின்றான் யூதாசு. "குற்றமில்லா இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததனால் பாவஞ் செய்தேன்" என்று மனம் அழுங்கிக் கூறினான். பதில் என்ன கூறினார்கள்? மரத்துப்போன அந்தப் பெருந்தலைகள், “எங்களுக்கு என்ன; உன்பாடு!" என்றன. என்றாலும் 'நான் செய்தது கீழான காரியம்; பாவம் எதுவும் செய்யாமல் உலகோர் பாவம் துடைக்க வந்த பரமனைக் காட்டிக்கொடுத்த கயவன் யான்' என்று அவன் நெஞ்சம் இடைவிடாது இடித்துரைக்க நான்றுகொண்டு செத்தான்; அவனைச் சாகப் பண்ணினோர் யாவர்? இழுத்துச் சென்று தூக்கில் மாட்டினரோ? அவனே

1