உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

189

சாவை வரவேற்றுக்கொண்டான். தனக்கு வரும் இன்ப துன்பங்களைப் பிறர் ஆக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது!

தொலைதேய, எருசலேம் நகரில் நடந்தது இந்நிகழ்ச்சி! தமிழகத்து மண்ணிலே இதற்கு இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது! வகுத்துக்காட்டிய பெருந்தகை வள்ளுவர்! உலகப் பொதுமையை உள்ளடக்கியது அவர் கொள்கை! ஆகலின் எங்கெங்கு நோக்கினும் குறளுக்குச் சான்றுகள் கிட்டும்! காரணம். மாறாக் கொள்கைகளையே வலியுறுத்திச் செல்லு வதே குறளின் இயல்பாக இருத்தல்.

“நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்"

துன்பமெல்லாம் துன்பம் செய்தவருக்கே வந்துசேரும். ஆதலால் தமக்குத் துன்பம் வேண்டாதவர் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யார்; அதாவது, தமக்கு இன்பம் வருதலைக் கருதிப் பிற உயிர்களுக்கு இன்பம் செய்வர்!

தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டி சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் கலந்து, பாலும் பருப்பும் நெய்யும் விட்டுப் பாகு காய்ச்சுபவன் அதன் நறுமணம் தன்னை உவப்புறுத்தப் பெறாமல் போகான்! வேப்ப எண்ணையைக் காய்ச்சி எடுப்பவன் அதன் குமட்டலுக்கு இரையாகாமல் போகான்! நாள்தோறும் கண்டறியும் நிகழ்ச்சி இது!

நோயின்மை வேண்டுமா? நோய் செய்யற்க!