உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

கின்றது; அதனை வகுத்தவன் வகுத்தான் ஆகின்றான்! அவனே இறைவன்.

இறைவனால் வகுக்கப்பட்ட ஊழ் காலம், இடம், சூழ்நிலை, ஆகியவற்றைக்கொண்டு திருவிளையாடல் நடத்துகின்றது. அதனை, 'ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே' என்று குறிப்பிட்டு அமைதியடைய வேண்டியதுதான்!

ஒருகாடு; காட்டில் சிறிது முன் பின்னாக நால்வர் தனித் தனியே வருகின்றனர். முதல்வன் வரும்போது எதிரே கள்வன் ஒருவன் வந்து இருக்கும் பொருளைப் பறித்துச் செல்லுகிறான். அடுத்து வந்தவன் முன் புலி ஒன்று தோன்றுகின்றது; அவனை அடித்துக் கொன்று தீர்க்கின்றது. அடுத்து வருபவனுக்கும் புலி தோன்றுகின்றது. ஆனால் புலி அவனைக் காணவில்லை. அச்சத்தால் கால்பிடர்பட ஓடித் தப்புகிறான். இறுதியில் காட்சிகளைக் கண்டு கண்டு இன்புற்றுக்கொண்டே காட்டைக் கடந்துவிடுகிறான். நால்வரும் ஒரே பாதை வழியே வந்தனர். எனினும் ஒரே வகை இன்ப துன்பங்களுக்கு ஆட்பட்டார்கள் அல்லர். இதனை எவ்வாறு முடிவு செய்வோம். அவர்கள் நேரம் என்போம்; முன்வினை என்போம் -என்ன சொன்னாலும் சரி - அதன் பொருள் 'ஊழ்' என்பதே யாம்!

ஊழின் தன்மையைச் சான்றுகளால் காட்டுவது உண்டு! ஒருவன் எங்கெங்கு ஓடினாலும் அவனை விடாது தொடர்வது எது? நிழல்! அந்நிழலைப் போல் தொடரும் ஊழ்!

ஆயிரக்கணக்கான பசுக்கள் கூடிய மந்தை ஒன்று நிற்கிறது. இளம் பசுக்கன்று ஒன்று அவிழ்த்து விடப்படுகிறது. எத்துணைக் கூட்டம் ஆயினும் கண்டுவிடுகின்றது அல்லவா! இளங்கன்று தன் தாய் அல்லாத வேறொன்றை அணுகுவதும் இல்லை. வேறு பசுவும் கன்றை ஏற்றுக்கொள்வதும் இல்லை. உரியதை உரியது அடைகின்றது. அதுபோல் ஊழும் எங்கு எங்குச் சென்றாலும் உரியவனை விடாமல் தொடர்ந்து சென்று பற்றிக்கொள்ளும்.

ஊழ் கண்ணுக்குத் தெரிகின்றதா? இல்லை. எனினும் தன் வலிமையை நிலைநாட்டத் தவறிவிடுவதும் இல்லை. ஊழ், காலம், இடம், சூழ்நிலை கொண்டு கடனாற்றுகின்றது. காலம்,

டம், சூழ்நிலைகளை மாற்றியமைக்கும் ஆற்றல் கைவரப் பெற்றால் ஊழையும் மாற்றியமைத்துவிடலாம்! அவ்வாறு மாற்றி யமைத்தவர்களே உரவோர்கள்! ஊழையும் புறங்கண்ட

வல்லவர்கள்!

1