66
திருக்குறள் கட்டுரைகள்
191
'உயிர்கள் தோன்றுவதும், வளர்வதும், வாழ்வதும், மறைவதும் தனித்தனியே பலப்பல செய்வதும், இன்புறுவதும் துன்புறுவதும் அவற்றின் எண்ணம்போல் இல்லை! முன்னமே வல்லான் ஒருவனால் வகுக்கப்பட்டுள்ளபடியே நடக்கின்றன. அவ்வவை செய்த முன்வினைப்படியே அவை அவ்வாறு வல்லவனால் வகுக்கப்பட்டுள்ளன" என்பதே ஊழ்பற்றிய பொதுவான கருத்து!
'ஊழ்' பற்றிய எண்ணம் எப்படி ஏற்பட்டிருக்க வேண்டும்?
ஒரு குழந்தை தாய் வயிற்றில் இருந்து வெளிவருகிறது. இன்னொன்று பிறந்தவுடனே இறந்துவிடுகின்றது; வேறொன்று சற்றே வளர்ந்து வாலிப வயதில் சாகின்றது; மற்றொன்று முதுமையுற்று நெடுநாள் நோய்க்கு ஆளாகி அழுந்தியும், அழுந்தாமலும் சாகின்றது. இவற்றைக் கண்டவர்களுக்குச் சிந்தனை உண்டாயிற்று. ஒன்றுபோல் நடக்காத இத்தன்மை ஏதோ ஓர் ஆற்றலால் நிகழ்த்தப்பெறுகிறது என்ற முடிவு கொண்டனர்.
ஒருசிலர் ஒருவேளை உணவுக்கும் வழியின்றித்திண்டாடுவதும் அதற்கும் உழைத்து உழைத்து ஒடுங்கியும் நிலைமையில் சற்றும் மாற்றமில்லாது இருப்பதும், மற்றும் சிலர் கோடி கோடியாகக் குவித்து வைத்திருப்பதும், அவர்கள் இருந்த இடத்தைவிட்டு எழும்பாமலே மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்கி குவிப்பதும், செல்வம் இல்லாதவன்கூட வாய்ப்பாக அனுபவித்து மகிழ்வதும், செல்வம் மிகுந்துள்ளவன்கூட அனுபவிக்க முடியாமல் போவதும் கண்டு கண்டு நம் நினைவுக்கும், விருப்புக்கும், தெளிவு செய்தனர். இப்படியே பலப்பல நிகழ்ச்சிகளையும் நோக்கி நோக்கி 'ஊழ்' என ஒன்று உண்டு என உறுதி கொண்டனர், அவ்வுறுதி, மக்களுக்கு நலம் பயத்தல் வேண்டிப் பெரியோர்களால் பிறருக்குத் தெளிவாக எடுத்து விளக்கப் பெற்றது. 'ஊழ்' கண்டு அஞ்ச வேண்டும், சோர்ந்துவிடவேண்டும் என்பது ஊழைக்கண்டு பரப்பியோர் நோக்கம் அல்ல. அஞ்சாமையும், முயற்சியும் கொள்ளவேண்டும் என்பதே அவர்கள் விருப்பு!
குயவன் பிசையும் மண்போல உயிர்கள் இருக்கின்றன. காலமே குயவன் சக்கரமாக உள்ளது. குயவன் பானையாக வனையலாம்; சட்டியாக, குடமாக மூடியாக வனையலாம்! அவற்றின் வன்மை, மென்மை வாழ்வு, உடைவு, பயன்படுதல், பயன்படாமை அதன் ஊழ் ஆகின்றது. 'ஊழ்' வகுத்த வகை