உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

பூம்புகாரிலிருந்து புறப்பட்டு மதுரைக்கு வருகின்றான். வெயில் இன்னதென அறியாத மென்பூங் கொடியாம் கண்ணகியும் கால் கொப்புளம் கிளம்பக் காட்டுவழி வருகின்றாள். திருடுதல் என்பதைக் கனவினும் அறியாத கோவலன் கொல்லர் தலைவனால் காவலன் அரண்மனையில் களவாடிய கள்வன் என்னுங் குற்றச்சாட்டுக்கு உரியவன் ஆகின்றான். அவன் கள்வன் அல்லன் என்பதைக் காவலன் முன் சென்று நிறுவிக் காட்ட வேண்டிய கடமை கண்ணகியாருக்கு ஏற்படுகின்றது. இவ்வனைத்தும் ஊழின் திருவிளையாடல் இல்லையா?

ஊழின் ழின் திருவிளையாடல் இல்லையேல், கோவலன் புகாரிலிருந்து யாரும் அறியாவகை வைகறைப்பொழுதில் மதுரைக்குப் புறப்பட வேண்டியது இல்லை. செல்வம் அனைத்தும் இழக்காத, கப்பல் வணிக வளமும், மாடகூட

வாய்ப்பும், மாநாய்கண் பெருஞ் செல்வமும் மலை போல் கிடக்க

கண்ணகியார் காற்

சிலம்பே முதலாகக் கொண்டு பொருளீட்ட வேண்டியது இல்லை. இனி மதுரைக் காவலன் மாளிகையில் களவு போயதும் காற்சிலம்பு; கோவலன்

விற்க

வந்ததும் காற்சிலம்பு;

மாட மதுரை மன்னவன் மனைவிக்கு மதுரைக் கொல்லர் செய்து தந்த சிலம்பும் பூம்புகார்ப்

பெரு

வணிகன்

மாநாய்கன் மகளுக்குப்

புகார் நகரப் பொற் கொல்லர் செய்து தந்த

சிலம்பும் வேலைப்பாட்டில் வேறுபாடற விளங்குகின்றன! களவு போயதும் ஒரு சிலம்பு; விற்கக் கொண்டு சென்றதும் ஒரு சிலம்பு. இப்படி நடைபெறுவது உண்டா? களவு செய்பவனுக்கும் கருணையா? ரண்டுள் ஒன்றை எடுத்துவர! எடுத்ததனால்