உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

197

பயன் என்ன? இருந்ததனால் பயன் என்ன? - ஒன்றாக அணிந்து மகிழ முடியாதே. சரி, விற்பவனும் ஒற்றையாகச் சிலம்பை விற்பது உண்டா? வாங்குபவர்களும் ஒற்றையாகி வாங்கி யாது செய்வர்? நடவாதவெல்லாம் நடக்கின்றது மட்டும் உண்மை! தனை நடத்திக்காட்டும் திருத் தொண்டினை ‘ஊழ்' ஏற்றுக்கொண்டு விட்டது. இனி அதற்கு அரியது ஏது?

எண்ணிக்கையாலும், தோற்றத்தாலும், தொழிலாலும் ஒன்றுபட்ட பூம்புகார்ச் சிலம்பும், மதுரைச் சிலம்பும் ஒரே ஓர் வேற்றுமைகொண்டு இருக்கின்றன - அவற்றின் உள்ளிடு பரல்களால்! பாண்டிமா தேவியார் சிலம்பில் 'முத்து' இடப் பட்டுள்ளது! கண்ணகியார் சிலம்பில் ‘மணி’ இடப்பட்டுள்ளது! இந்தவேற்றுமையும் எதற்காக? அதனைக்கொண்டேபாண்டியனையும் அவன் மனைவியையும் வீழ்த்தி வளைந்த கொடுங்கோலைச் செங்கோலாக்கி நிமிரச் செய்கிறது. குற்றஞ் சாட்டப்பெற்ற கோவலன் குற்றமற்றவன் ஆகின்றான். 'ஊழ்' என்னுங் கூத்தன் எத்தனை எத்தனையோ நயங்களால் நாடகம் ஆடி வெற்றி கண்டுவிட்டான் இல்லையா? ஆனால், இந்நிகழ்ச்சியைக் கூறும் சிலப்பதிகாரக் காவியஞ் செய்ய செந்தமிழ் இளங்கோவடிகளிடத்து ஊழ் செல்ல முடிந்ததா? வெல்ல முடிந்ததா?

நெடுஞ்சேரலாதன் சிங்காதனத்து வீற்றிருக்கின்றான். மூத்தவன் செங்குட்டுவனும், இளைய இளங்கோவும் உடன் இருக்கின்றனர். முக்காலமும் முறையாகத் தெளிந்த சோதிடன் ஒருவன் புகுந்து உரையாடுகின்றான். "வேந்தே! நின்மக்கள் இருவருள் மூத்தவன் இருக்க இளையவனே ஆட்சி உரிமை ஏற்றற்கு உரியவன்" என்கின்றான். இதனைக் கேட்ட வேந்தன் திகைப்புற, செங்குட்டுவன் வருத்தமுற, அவையோர் அமைதியுற, இளங்கோ எழுந்து “காலமுணர்ந்த கணித! நீ கூறிய முறைமை யற்ற நியதியை முறியடிக்கிறேன் பார்; நாடாளும் வேந்தனாக அண்ணன் இருக்கட்டும்; காடாளும் வேந்தனாக (துறவியாக) யான் போகிறேன்; எப்பொழுதோ இல்லை - இப்பொழுதே! என்று துறவுக்கோலத்துடன் வெளியேறினார். அரண்மனையில் இருந்தால், நாட்கள் சென்றால் ஊழின் ஆட்சிக்கு ஒருவேளை அடிபணிய நேரிட்டாலும் நேரிடலாம் என்று கூறிக்கொண்டே வெளியேறினார். ஊழை வென்ற உரவோர் ஆயினார்.