இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
198
9
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
“ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்”
என்னும் வள்ளுவனார் வாய்மொழிக்கு வேறொரு சான்றும், வேண்டுமோ?
‘ஊழின் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்’
என்பதற்கு இலக்கியம் யாத்த இளங்கோவடிகளே,
‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றிழ் தாழாது உஞற்று பவர்’
என்னுங் குறளுக்குச் சான்றாக இலங்குகிறார் என்றால் மிக வியப்புக் குரியதேயாம். இதுகாறும் அறிந்தவற்றால் ஒரு தெளிவினை நாம் கொள்ளலாம்.
“ஊழ் என ஒன்று உண்டு; அதனைக் கண்டு சோர்ந்துவிட வேண்டியது இல்லை; அதனை மாற்றியமைக்க இயன்ற அளவும் முயலுதல் சிறப்பு; முயன்று முடித்து விடுவது பெருஞ்சிறப்பு முடியாது போயின் ஊ போயின் ஊழ் வலிமை மிக்கது என அமைதி கொள்வது நன்று"