200
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
தமிழர்கள் "சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்தல் வேண்டும். அவ்வளவுடன் நின்றால் பயன் இல்லை; ஊராக, நகராக, நாடாக வளர வேண்டும். பின் "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்." இவ்வாறு உலகெலாம் பரவுதற்கும், பரப்புதற்கும் வழிவகைகள் வேண்டும். முதற்கண் செய்ய வேண்டுவது என்ன? கட்டளையிடுகிறார் பாரதியார்:
"சென்றிடுவீர் எட்டு திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்த்திங்குச் சேர்ப்பீர்.'
“வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கம் கவிப்பெருக்கும் பெருகச் செய்க!”
“திறமான புலமையாக இருக்குமாயின் வெளிநாட்டோர் வணக்கம் செய்வர்.”
திறமான புலமையின் விளைவாகத் திகழ்வது யாது? அது திருக்குறளேயாம்! திறமான புலமைத் திருவள்ளுவனார் திருக்குறள், உலக அன்னையின் ஒளிர்மணி முடிக்கண் திகழும் தலைமணியாகக் கருதக் கிடக்கும்காலம் நெடுந்தொலைவில் இல்லை மிக அணித்தேயாம்!
-
உலகப் போட்டி
திருக்குறள் புலவர்களைக் கவர்கின்றது; பொது மக்களைக் கவர்கின்றது; இந்நாட்டவரைக் கவர்கின்றது; அயல் நாட்டவரைக் கவர்கின்றது; மனிதகுலம் அனைத்தையுமே கவர்ந்து நிற்கின்றது.
தனால் நாகரிகமும் அறவேட்கையும் மிக்க நாடுகள் அனைத்தும் தங்கள் தங்கள் மறை நூல்களுக்கு ஒப்பாக வைத்துப் போற்றும் பேற்றை எய்துகின்றது; ஏறத்தாழ, இந்நாள் நூறு மொழிகளில் திருக்குறள் பெயர்க்கப் பெற்றுள்ளது! தமிழன் பேறா? தமிழின் பேறா? வள்ளுவன் தமிழகத்துப் பிறந்த பேறு! அதனால் தானே,
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.
என்று விம்மிதமுறுகிறார் பாரதியார்.
தமிழர் இன்று உலகோடு எவ்வழியில் போட்டி போட்டு
பெருமிதம் காட்டமுடியும்?