உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

201

பிச்சை யெடுப்பதையும் பிழைப்புத் தொழிலாகக் கொண்ட, மக்கள் பல்லாயிரம் பல்லாயிரமாய் இருக்கும் நாடு செல்வச் சிறப்பால் பெருமிதம் கொள்ள முடியுமா?

நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது, நூற்றுக்கு நூறு என்று கற்றவர்கள் எண்ணிக்கை பெருகியுள்ள நாடுகளுடன், நூற்றுக்கு இருபத்து மூன்று, இருபத்தைந்து எனக் கற்றோர் எண்ணிக்கை வைத்துக்கொண்டு போட்டியிட்டுச் சிறப்படைய முடியுமா?

ஞாயிறு திங்கள் மண்டிலங்களுக்குச் செல்லும் அளவுக்கு விரிந்துள்ள அறிவியல் உலகுடன், தொடக்க நிலையில் உள்ள நாம் போட்டி போட முடியுமா?

போட்டிக்கு நம்மைத் தயார் செய்யும் நிலையில் நாம் இந்நாள் இருக்கின்றோம். வளர்ந்துவிட்ட சில நாடுகளோ போட்டியின் முன்னணியில் நின்று முழு மூச்சாக ஓடி க் கொண்டிருக்கின்றன. இந்நிலைமையில், எந்தப் போட்டியில் உலகை எதிர்நோக்குவது?

நமக்குரிய வாய்ப்பு

இந்நிலைமையில் நமக்கொரு வாய்ப்பு - வெற்றி வாய்ப்பு - இல்லாமல் போகவில்லை. அது நல்ல வெற்றிப் பேறுதரும் என்பதை நாம் உணர்ந்தபாடில்லை. இந்த ஒன்று நமக்குள்ள பெருங்குறையேயாம்.

வள்ளுவத்தை உலகெல்லாம் பரவும் வகை செய்து விட்டோமானால் உலகப் புகழ் நாம் எய்துவதில் எத்தகைய ஐயப்பாடும் இல்லை. இந்தத் துணிவும் செயலாற்றும் திறமும் நமக்கு வேண்டும். "வள்ளுவன் குறளை வாரி இறையடா தமிழா" என்கிறார் நாமக்கல் கவிஞர். இப்பணியைத் தமிழர் அனைவரும் தலைமேல் தாங்கிச் செயல்பட வேண்டும். இது நம் தலையாய

கடமை!

வள்ளுவம் பரவின் வையகப் புகழ் நம்மைத் தேடிவருதல் உறுதி. இதற்குப் புதிதாக நாம் அரும்பாடுபட வேண்டியது இல்லை. முடியர் முயற்சி செய்து அல்லல் அடைய வேண்டியது இல்லை. புதிய ஒன்றைக் கண்டுபிடிப்பது அரிது, அதனை இயக்கிக்காட்டித் தொழிற்படுத்துவது கடினம்; அதன் வழியாகப் பொருள்களைப் படைப்பது அரிய முயற்சி. ஆனால் படைத்து வைத்த பொருள்களை எடுத்து அழகுற அடுக்கி வைத்துக்

-