202
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
கண்காட்சியாக்கிக் காண்பவர்கள் கண்ணைக்கவர்ந்து கைத் தட்டைப் பெறுவது எளிதும் இன்பமும் இல்லையா? கண் காட்சிப் பொருட்களை உண்டாக்க வேண்டிய கடமைக்கு நாம் ஆட்பட வேண்டியது இல்லை; அழகுற அடுக்கி வைக்கும் தொண்டு செய்தால் போதும்! இத் தொண்டு போல்வதுதான், பெறலரும் அற நூலாம் திருக்குறளை உலக மேடையில் ஏற்றுவது! எளிய முயற்சியால் அரும்பெரும் பயன் எய்த வழியிருக்கும் போது, அதனைச் செய்யவும் முடியாதவர்களாக நாம் இருப் போமாயின் ‘அரும்பணி’ எதுவும் செய்வோமோ? இருக்கும் வீட்டில் ஒளிவிளக்கேற்ற இயலாதவன் புது வீடு கட்டி முடிப்பானோ? பிறநாட்டார் பேச்சு
66
“திருக்குறள் பிறந்த நாட்டிலே போய் ஒழுக்க நெறி இன்னது என்று ஓதுவது பொருந்தாச் செயலாகும்" என்றும், திருக்குறள் போல் ஒரு நூல் மலர வேண்டுமாயின் அந் நாட்டின் ஒழுக்கச் சிறப்பும் நாகரிகமும் தன்னிகரற்றதாகவே இருந்திருக்க வேண்டும்" என்றும் மேல் நாட்டுப் பேராசிரியர்கள் கூறியுள்ளார்கள் என்றால் நாம் பெற்ற பேறு - திருவள்ளுவரைப் பெற்றதே - என்று கூறிப் பெருமை அடையலாம் அல்லவா!
பொதுவாக, அறநூல்கள் சட்டம் போன்றவை. சட்டங்களைப் பொது மக்கள் விரும்பி மகிழ்ந்து படிப்பது இல்லை. வழக்கறிஞர்கள், நீதிபதிகள் சட்டங்களை மனனம் செய்து அதன் நுணுக்கங்களை ஆராய்வதைக் காண்கிறோம். அது அவர்கள் தொழிலின் தேர்ச்சிக்காகச் செய்யும் கடமையாகும். ஆனால் திருக்குறள் அறச் சட்டமாக மட்டும் இல்லாமல், இன்சுவை பயக்கும் இலக்கியமாகவும், அள்ள அள்ளக் குறையாத மணிக்குவியலாகவும் இருக்கும் காரணத்தால், இன்னார் என இல்லாது எல்லாரும் விரும்பிக் கற்கின்றனர். மேடையிலும் சரி எழுத்திலும் சரி, உரையாடலிலும் சரி, திருக்குறள் கருத்துக்கள் டம் பெறத் தவறுவது இல்லை.
இறவா நூல்
நாள் இதழ்களின் வாழ்வு நிமிடக் கணக்கில் முடிந்து விடுகின்றது. வார, திங்கள் இதழ்களின் வாழ்வு மணிக் கணக்கில் முடிந்து விடுகின்றது. சில நூல்களின் வாழ்வும் ஒருமுறை திருப்பியதுடன் முடிந்து விடுகின்றது. ஆனால் திருக்குறளை இவ்வாறு ஒதுக்குவது ல்லை. 1330 அருங்குறளையும்
1330