66
திருக்குறள் கட்டுரைகள்
'அறன் அறிந்தேம் ஆன்ற பொருள்அறிந்தேம் இன்பின் திறன்அறிந்தேம் வீடு தெளிந்தேம் - மறன்எறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால் கேளா தனவெல்லாம் கேட்டு."
211
அறத்தை அறிந்தாராம்; பொருளைஅறிந்தாராம்; இன்பத்தை அறிந்தாராம்; வீட்டையும் அறிந்தாராம்; கேளாதன வெல்லாம் கேட்டு அறிந்தாராம். இன்னும் என்னதான் அறிய வேண்டும்?
பொய்யும் மெய்யும்
க்
தேனீக் குடிக்கீரனார் என்பவர் ஒரு புலவர். அவருக்குப் பொய்மை எது? மெய்ம்மை எது என்பதில் தெளிவு ஏறப்படவில்லை. அதனால் புத்தகக் குவியலில் புகுந்து தேடித்தேடி அலுத்தார். அவர் கேள்விகட்கு விடை திருக்குறளை படிக்குங்கால் கிடைத்தது. அதனால் “பொய்யை” - இது பொய்யெனத் தெளிவு செய்ததும், ‘மெய்யை' - இது மெய்யென நிறுவிக்காட்டியதும், திருக்குறள் தான். இனி பொய், மெய், மயக்கம் ஏற்படக் காரணம் இல்லை" என்று தெளிவுறக் கண்டு நமக்கும் உரைத்தார்.
இனிமை
‘ஏவாமக்கள் மூவா மருந்து' என்பது பெரியோர் மொழி. நன்மக்களை ‘அருமருந்தன்ன புதல்வர்' என்பது வழக்கு. உயிர் காக்கும் உயர்நலங் கனிந்தது மருந்து ஆகலின் அதனை ஆருயிர் மருந்து என்பர். அமுதம் என்றும் கூறுவர். இத்தகைய மருந்தினைத் தேனில் குழைத்துக் கொடுப்பது நம் பண்டையோர் கண்ட முறை. இதுபோலவே திருவள்ளுவர் நூலும் இன்சுவை கெழுமியதாய்ப் பன்னோயும் போக்குவதாய் அமைந்துள்ளமை கண்டார் கவுணியன் என்னும் கவிஞர் பெருமான்.
“சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
வந்த இருவினைக்கு மாமருந்து.'
99
என்பது அவர் மொழி. திருக்குறளை நினைக்கச் சிந்தை இனித்தது; கேட்கச் செவி இனித்தது; சொல்ல வாய் இனித்தது; இத்தனை இனிப்புச் சேர்ந்து புகுந்தால் நோய் செய்யுமல்லவா! நோய் செய்யவில்லை! திருக்குறளே மருந்தாயிற்றே! சாதாரண நோய் மருந்தா? பெரிய வினைக்கே மருந்தாயிற்றே! நோயை ஒழிக்காதா?