212
இளங்குமரனார் தமிழ்வளம் 9
செயலூர் செங்கண்ணனார் என்னும் புலவர் திருவள்ளுவத்தில் மிகத் தோய்ந்தவர். அவருக்கு திருக்குறள் படிக்குந்தோறும் புதுப்புதுப் பொருள்களைத் தந்து இன்பஞ் செய்தது. குறளின் அடிச் சிறுமையையும், பொருட் பெருமையையும் எண்ணினார். ஆராய்வோர் ஆராய்ச்சித் திறம் எவ்வளவோ அவ்வளவு ஆராய்வுப் பெருக்கம் குறளில் அமைந்துள்ளது" என்று முடிவு செய்தார். "உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டு என்பது அவர் உண்மை மொழி.
66
கற்க; நிற்க;
முகையலூர் சிறுகருந்தும்பியார் மக்கள் வாழும் விதத்தைத் தெளிவுறுத்தினார். "பொழுதை வீணாக்காமல் திருக்குறளை ஆராய்தல் வேண்டும்; ஆராய்ந்ததனைப் பிறருக்கு உரைத்தல் வேண்டும்; பிறர் ஆராய்ந்து கூறுவதைத் தெளிவாக அறிதல் வேண்டும்; நன்முறையில் ஆய்ந்து தெளிந்ததைச் செயலாற்ற வேண்டும். ஆம்; கற்கவேண்டும்; கசடறக் கற்க வேண்டும்; கற்றபடி நிற்க வேண்டும்!" இதுவே தும்பியார் கருத்து.
திருக்குறளை ஓதுதலும் ஆராய்தலும் அரிது இல்லை; எளிது; இன்பமான ஒன்றை விரும்புதல் இயற்கை. விளையாட்டு எவ்வளவு இன்பம் தருகிறது! வேலையை நினைக்கப் பெரு மூச்சு வாங்குகிறது இல்லையா? ஓட்டப் போட்டியில் பங்கு எடுக்க உவகை கொள்பவன், நடந்து போய் ஒரு வேலையைச் செய்து வரத் துன்பப்படுதலைக் கண்ணாரக் காண்கிறோமே! திருவள்ளுவர் நூல் 'ஓதற்கு எளிது' என்றார், மாங்குடி மருதனார்.
"உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு.
என்று எளிமையாதற்குக் காரணமும் காட்டினார்.
இன்பம் நல்கும் திருக்குறள் ஒளிமிக்கது. இதனைக் காட்ட விரும்பிய புலவர் நப்பாலத்தனார். அவர் திருக்குறளை விளக்குடன் ணைத்துப் பேசுகின்றார்.
விளக்கு
திருக்குறள் விளக்குக்கு இணையானது என்ற அளவில் நின்று விடவில்லை அவர். விளக்கினை உறுப்பு உறுப்பாக உவமைப்படுத்திக் காட்டுகின்றார்.