உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

215

அறிந்தவர்; குடநாடாம் சேர நாட்டையும், புனல் நாடாம் சோழநாட்டையும், தென்னாடாம் பாண்டி நாட்டையும் பல்கால் கண்டு களித்தவர்; சேர நாட்டுப் பொருநை நதியும், சோழ நாட்டுக் காவிரி நதியும், பாண்டி நாட்டு வையை நதியும் அவர் நீராடிக் களிப்புற்றவை; சேரன் கரூரும், சோழன் உறையூரும், பாண்டியன் மதுரையும் அவர் இனிது உறையும் நலம் பெற்றவை;