216
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
சு
மூவேந்தர்களது மங்கலமுரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு ஆய மும்முரசங்களும் ஆரவாரிக்கப் கேட்டு மகிழ்ந்தவர்; இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் ஆயமுத்தமிழும் கற்றுத் துறை போயவர்; விற்கொடியும், புலிக் கொடியும், மீன் கொடியும் விண்ணளாவிப் பறப்பது கண்டு விம்மிதமுற்றவர்; மூவேந்தர்களும் உலாவரும் பட்டக் குதிரைகளின் அழகுமிகு கோலத்திலே உள்ளம் தோய்ந்தவர். அதே போல் வள்ளுவனார் முப்பாலிலும் ஊனுருக, உள்ளுருகத் தோய்ந்தவர். திருக்குறள் முப்பால்களையும் எண்ணும் பொழுதெல்லாம் அவருக்கு மூன்று மூன்றாகத் தொகுதி பெற்ற முற்காட்டியவை நினைவுக்கு வந்தன. இவ் வனைத்தும் சிறப்புக்குரியவை என்றாலும் திருக்குறளின் சிறப்புக்கு இணையாகா எனக் கண்டார். "இணையாகும் தகுதி ஒன்றே ஒன்றற்கே உண்டு. அதுவும் மூவேந்தர் மணிமுடியன்று; அம்மணி முடிகளில் நறுமணத்துடன் விளங்கும் நல்ல ஆரமேயாகும்." என்னும் முடிவுக்கு வந்தார். மாலைக்குத் தனிச் சிறப்பு உண்டு; மன்னர் மாலைக்கோ மிகச் சிறப்பு; அதிலும் அவர் முடி மாலையைக் கேட்க வேண்டுமா?
திருக்குறளின் இனிமை, தெளிவு, சுருக்கம் இவற்றைக் கண்டோம். சில புலவர் அதன் செறிவினைச் செவ்விதின் விளக்கியுள்ளனர்.
கடுகும் அணுவும்
இடைக்காடர் என்னும் புலவர் பெருமகனாருக்குக் குறளை நினைத்தவுடன், கடுகு முன்னின்றது. கடுகு இன்னும் சிறுமைக்கு அளவாகவே இருக்கின்றது. 'கடுகளவு' ‘கடுகத்தனை' எனப் பேச்சு வழக்கில் உள்ளதை அறிவோம். இச்சிறிய கடுகைத் துளைக்கவேண்டும். துளைப்பது அரிதுதான். அரும்பாடுபட்டுத் துளைத்தாலும் போதாது. அத்துளை வழியே கடலைப் புகுத்த வேண்டும். ஒரு கடலையா? இரு கடல்களையா? உலகிலுள்ள கடல்களை யெல்லாம். முடியுமா? முடியாதுதான்! முடித்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது திருக்குறள். குறள் கடுகு; அதனுள் புகுந்துள்ள ஏழு சீர்களும் ஏழு கடல்கள்.
திருக்குறளின் பொருட் செறிவுக்கு இதனினும் எடுத்துக் காட்டு வேண்டுமா? வேண்டுவது இல்லை! என்றாலும் ஒளவையார் கூறினார்.
கடுகு கூடப் பெரிது! கடுகினும் நுண்மையானது அணு! அவ்வணுவைத் துளையிட வேண்டும். அதனுள் ஏழு கடல்களையும்