திருக்குறள் கட்டுரைகள்
217
புகுத்திவிட வேண்டும். அப்படியானால்தான் குறளுக்குச் சரியான சான்றாகும்.
அணுவுக்கு அளவு உண்டா? அளவு காட்டினர் முன்னோர். ஓர் எள்ளை 512 பங்காகப் பிரித்து வைத்து, ஒரு பங்கு எடுத்தால் அதுவே அணு அளவு! அதைத் துளைக்க வேண்டுமாம்? கடல்களையும் புகுத்த வேண்டுமாம்?
“கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்”
66
‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத் தறித்த குறள்.
- இடைக்காடர்
ஔவையார்.
கல்விப்பயன்
எல்லாப் பொருளும் தன்னகத்துக் கொண்டது திருக்குறள் என்றோ, தனி மாண்புடைய அறநூல் என்றோ, இன்சுவை சொட்டும் இலக்கிய நூல் என்றோ நாம் சொல்லிக் கொண் டிருப்பதால் எத்தகைய பயனும் இல்லை. திருக்குறள் படிக்க வேண்டிய நூல் அன்று; கற்க வேண்டிய நூல்; அதனால்தான் "வாழ நூல் செய்த வள்ளுவரும்" என்று ஆராய்ந்தோர் கூறுவர். வள்ளுவரும் தம் நூல் கற்போர் கொள்ள வேண்டியதைக் காட்டத் தவறினார் அல்லர். 'கல்வி'யைப் பற்றி ஓர் அதிகாரம் வகுத்தார்; அதனுள் தம் கருத்துக்கள் அடங்காமை கருதிக் கல்லாமை என்றோர் அதிகாரம் வகுத்தார்; கல்வி போலவே நற்பயன் அளிப்பதும், கல்வி வல்லோர் வாய்க்கேட்டுப் பயன் பெறுவதுமான ‘கேள்வி'யை அதன்பின் வைத்தார். அறிவின் இலக்கணம் இன்னதெனத் தெளியுமாறு ‘அறிவுடைமை' என்றோர் அதிகாரம் அதன்பின் வைத்தார். இந் நான்கு அதிகாரங்களும் கல்வியின் தொடர்புடையனவாக, இவற்றின் பயனாக, 'குற்றங் கடிதலை' அவற்றின்பின் வைத்துள்ளார். இவ்வரன்முறையே ‘கற்பது’ நிற்பதற்கே என்பதைத் தெளிவுறுத்தும் என்றாலும் அவர் நேரிடையாகக் கூறாமலும் போனார் அல்லர்.