4. பழிவழியைப் பாராதே!
எல்லாரும் இன்பமாக வாழ்வதைக் காண்பதே எனக்கு இன்பம்" என்று தாயுமானவர் உரைக்கிறார்.
"இரந்து வந்தவனுக்கு ஈந்து, அவன் முகத்தில் அரும்பும் இன்பத்தே காண்பதே இன்பம்" என்று மொழிகிறார் பொய்யில் புலவர்.
“துன்புறுத்தும் ஆசைகளை ஒழிப்பதே இன்பம்” என்று இயம்புகிறார் புத்தர் பெருமான்.
66
'அறவழியால் பொருள் தேடி, அப்பொருளால் அடைவதே இன்பம்" எனச் சான்றோர் பலர் சாற்றுகின்றனர்.
இவர்களைப்போல
இவ்வுலகிலுள்ள
அனைவரும் எண்ணுகின்றனரா?
மாந்தர்கள்
புகை குடிப்பதிலே, கள்ளருந்துவதிலே, புல்லியர்களுடன் தொடர்பு கொள்வதிலே, பொய் வஞ்ச வழிகளில் போவதிலே, அடுத்துக் கெடுப்பதிலே, அயலாரைத் தூற்றித் திரிவதிலே, இன்பங் காண்பவர்கள் எத்தனைப் பேர்? இவர்கள், இன்பம் என இவற்றைக் காண்பானேன்?
பொய்யின்பத்தை-போலியின்பத்தை-மெய்யின்பமாகக் காணுகின்றனர். போலி இன்பந் தந்த அவை மறுநொடியிலேயே துன்பம் விளைத்தலைக் காண்கின்றனர். அத்துன்பத்தைப் போக்குவதற்காக மேலும் மேலும் அப்போலி இன்பச் சேற்றிலேயே ஆழுகின்றனர்; அமிழ்ந்தும் விடுகின்றனர். பிறருக்கும், சேற்று வழியைக் காட்டும் கைகாட்டி மரமாகின்றனர்.
புகை குடிக்கும் ஒருவன், புகையை இழுத்து விடுவதிலே, அப்புகை காற்றில் கலந்து எழில் நடனம் ஆடிச் செல்வதில், உதட்டை வெதுப்பிக் குளிரைப் போக்குவதில், சிறுசிறு இன்பங் காணுகிறான். அதனால், பொருட் செலவை அவன் பொருட்டாக எண்ணுவதில்லை; வாய் நாற்றத்தைப் பற்றிக் கருதுவது இல்லை; உதடுகள் கருத்துப் போவதையும் வெளிறிப் போவதையும்