42
இளங்குமரனார் தமிழ்வளம் – 9
திண்ணையில் விளக்கேற்றி வைப்பர். பொழுதாகி வந்த வழிப்போக்கர் - விருந்தினர் - வெளித்திண்ணையில் படுத்திருந்தாலும் டைவேளையில் எழுந்த வீட்டுக்காரர், அவரை உண்ணச் செய்வது கடமை எனக் கருதினர். இன்றும் தங்கள் திண்ணையில் பட்டினியாகப் படுத்திருக்கும் ஒருவரைக் கண்டு வருந்தி "இந்த வீட்டுத் திண்ணையில் பட்டினியாகக் கிடந்த பாவம் எங்களுக்கு வேண்டாம் ஐயா, ஒரு சத்திரம் மடம், சாவடியில் பசியாகக் கிடந்தால் கூடக் கவலை இல்லை; மனைவி மக்களோடு இருக்கும் வீட்டில் இப்படிப் படுக்கலாமா ஐயா!" என்று கடிந்து கூறிச் சாப்பாடு போடுபவர்களும் பட்டி தொட்டிகளில் உள்ளவர் என்றால் பண்டு தொட்டு வந்த நம் பண்பாடே காரணமாம்.
"
"உண்ண வேண்டுவோர் அனைவரும் வருக; உணவு ஆயத்தமாக உள்ளது" என்பதை அறிவிப்பதற்காகச் சமையல் ஆனவுடன் வீடுதோறும் முரசு அடிப்பது முற்கால வழக்கமாம். அப்படி வந்த விருந்தினர்களை முறைசொல்லி அழைத்து, முதன்மை தந்து பேணுவார்களாம். “சிறு வெதுப்பையும் தாங்காத மெல்லியது அனிச்சப்பூ. அப்பூவினும் மெல்லியர் விருந்தினர். வீட்டுக்காரர் சிறிது முகமாறிப் பார்த்தாலும் போதும்; தூரத்தே கண்டு தொலைதூரம் போகிவிடுவான் விருந்தாளி" என்று நினைத்துப் போற்றுவார்களாம். இத் தகையவர்களிடம் வீட்டில் இருப்பது எதற்காக? பொருள் தேடுவது எதற்காக? என்றால் என்ன சொல்லுவர்?
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம், விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு”
என்பர்.