இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50
9
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
நன்றியறிதல் உடையோர் நானிலப் பாராட்டுக்கு உரியர் ஆகின்றனர்; அவ்வறிவில்லார் வாழும் காலத்தும் பழியொடு வாழ்ந்து, ஒழியும் காலத்தும் வசையொடு நிலைக்கின்றனர். நன்றியுணர்வுடையோர் நாட்டில் பெருகினால் நலஞ் செய்வோர் தொகை பெருகும். நன்றி மறந்த கூட்டம் நாட்டில் மிகுந்தால் நலஞ்செய்யும் உள்ளமும் நைந்து சோரும். உணர்ச்சி அளவிலே கூடப் பாராட்டாத உலகியலே நினைந்து நினைந்து பெருகி விரிந்த நன் நெஞ்சங்கள் சோர்ந்து மடிந்து ஒடுங்கும். உலகில் நலஞ்செய்வோர் தொகை பெருக வேண்டுமா? நன்றி அறிவுடையோர் தொகை பெருகுதல் வேண்டும்.
கோடி கோடி விளக்குகள் அழகுற மாட்டி ஒளியூட்டினாலும் செங்கதிர் ஒன்றுக்கு நேராகுமா? ஆயிரம் ஆயிரம் குழை விளக்குகளை ஏற்றிவைத்தாலும் தண்மதியின் வெண்ணிலவுக்கு ணையாகுமா? மின் விசிறிகள் பன்னூறு பன்னூறு சுழன்றாலும்
முகில்