திருக்குறள் கட்டுரைகள்
51
முகில்
இன்னறுந் தென்றலுக்கு ஒப்பு ஆகுமா? ஒப்பா இவற்றை மாந்தர் குலம் மண்ணில் தோன்றிய காலமுதல் எய்தி வருகின்றதே! இவற்றுக்காகத் தரும் செல்வம் உண்டா? விலை உண்டா? வாடகைதான் உண்டா?
விலைக்குப் பெறாமல், வாடகை தராமல் ஒளி விளக்குகள், மின் விசிறிகள் கிடைத்து விடுகின்றனவா? இவற்றை இலவசமாய் எந்நாளும் ஏற்றத் தாழ்வு இன்றிப் பெற்றிருக்கும் மாந்தன் நன்றியுணர்வு உடையவனாக இருத்தல் வேண்டுமன்றோ! வர்த்திக்குக் கடைக்காரனிடம் காசுதரும் வேளையிலே விளக்கமாக வேண்டுமல்லவா, கடவுளின் பெருந்தகைமை? ஓலை விசிறி வாங்கும் நேரத்தே ஒவ்வொருவர் உள்ளத்தேயும் ஒளிவிட வேண்டுமல்லவா, உலக முதல்வன் அருட்கொடை? மின்சாரக் கட்டணம் செலுத்தும் வேளையில் எல்லாம், மண் எண்ணெய் வாங்கும் நேரத்தில் எல்லாம் அளப்பரும் இறைவன் வளச்செயல் நினைவில் நிற்கவேண்டும் அல்லவா? இப்படி இப்படி இயற் கையில் பெறும் பொய்யாவளங்களை நினையுந்தொறும் நினையுந்தொறும் மெய்யுணர்வு பெருகித் தெய்வ நலம்