உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

53

பதில் நன்றி கருதாமல் நன்றி செய்த பண்பாளனுக்குப் பல்லாயிரம் நன்றிகள் செய்ய வேண்டும் கடமை இருந்தும், எதுவும் செய்யாது, செய்த நன்றியையும் மறந்து வாழும் வாழ்வும் ஒரு வாழ்வோ? ஆம்! அதுவும் வாழ்வுதான்! என் வாழ்வு? கொலை வாழ்வு! நன்றி கொன்ற வாழ்வு! செய்ந்நன்றி கொன்ற வாழ்வு!

கொலை, கொள்ளை, பொய்மை முதலாக செய்யத் தகாத குற்றங்களைச் செய்தவனுக்கு குற்றம் நீக்க வழிகள் உண்டு; பெரியோர்களது மன்னிப்புக்கும், இறைவனது அருளுக்கும் வாய்ப்பு உண்டு; தவறு செய்தவன் தவறு என உணர்ந்து திருந்திவிடுவான் ஆனால்! செய்த நன்றியை மறந்த சிற்றறி வினனுக்கோ உய்வு என்பது இல்லவே இல்லை.

66

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

என்பது பொய்யா மொழியார் மெய்யுரை.

"செய்தி கொன்றார்க்கு உய்தி இல்லை”

என்பது புறநானூறு காட்டும் அறவுரை.