திருக்குறள் கட்டுரைகள்
63
ஐந்து உறுப்புக்களையும் ஓரோட்டினுள் அடக்கிக் காக்கும் ஆமைபோல், ஒரு பிறப்பில் ஒருவன் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வானானால் அவனுக்கு வரும் பிறப்புகளி லெல்லாம் பாதுகாப்பு உண்டு.
எல்லாரும் செய்யத்தக்க எளிய செயலையும் செய்யாமை
சிறுமை!
எல்லாரும் செய்தற்கு அரிய சயலைச் செய்வது
பெருமை!
பெருமை அடைய விரும்புதலும், விருப்புக்கு ஏற்ப முனைதலும் பெரியர் தன்மை. அடக்குதற்கு அரியதாம் புலன்களை அடக்கிவாழ்தல் பெரியர் தன்மையே!
66
ஆமை முதுகில் அலவன் (நண்டு) துயில் கொள்ளும் என்கிறது இலக்கியம். இது பொய்யுரையன்று; மெய்யுரையே. அடக்கிவாழும் ஆமை, வலிய ஓட்டின்மேல் நண்டு உறங்குவது பற்றிக் கவலையுற ஒன்றுமில்லை. அதன் அடக்கம் அவ்வளவு செரிவுடையது. இன்றேல். "நெல்லரிவோர் பல்லரிவாளின் கூர்மழுங்கினால் ஆமை ஓட்டில் தீட்டுவர்" என்று இலக்கியம் புனைந்துரைக்குமா?
ஒரு சொல் சொல்லுமுன் ஒன்பது சொற்கள் சொல்லி, அச்சொற்களாலே உள்ளே இருக்கும் 'நாற்றங்களையும்’ வெளிக்காட்டித் திரிவோர்களைக் காணும் நாம், எத் துணை வசை மொழிகளும், பழி மொழிகளும் கேட்டாலும் காதில் போட்டுக் கொள்ளாமல் பொறுமைக் கடலாக ருக்கும் பெருந்தகையார்களையும் காண்கிறோம். இவை நாவடங்
முதில்