உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

பழகி முதிர்ந்த ஒன்று எளிமையாதல் இயல்பே. இளங் கன்று தொட்டு நாள் தவறாமல் தூக்கித்தூக்கிப் பழகிவந்த ஒருவன், கன்று காளையான போதும் தூக்கினானாம். அவனுக்கு நாள் தவறாமல் சிறிதுசிறிதாக வளர்ந்து வந்த பழக்கம் எளி தாயிற்று. ஆனால் புதிதாக ஒருவன் காளையைத் தூக்க முடியுமா? இத்தகையதுதான் அடக்கமும், காவலும் பிறவும்.

அடக்கத்திற்குச் சான்றாகப் பன்றியைக் கூறுவர். ஆம்! அடக்கத்தில் உயர்ந்துததான் அது. என்ன நிலை ஏற்பட்டாலும் சரி, பன்றி தன்னை அடைத்திருக்கும் தொழுவத்தில் மலமும் நீரும் கழிக்காது. அதன் உணர்வோடு படிந்துவிட்ட தன்மை இது. அறிவுடைய மாந்தன் கூட-குழந்தை அன்று-சாலை

வெளியையும், சந்தைக் கடையையும், பூங்காக்களையும் பொது மன்றங்களையும் மல நீரால் பாழாக்கி வரும் இழிபாடு உடைய நேரத்தே மலந்தின்று வாழும் பன்றியின் அடக்கம் பாராட்டத் தக்கதே.

பன்றியினும் அடக்கத்திற்குத் தக்க சான்றாவது ஆமையே.

அஞ்சி வாழும் உயிர் வகையுள் ஒன்று ஆமை. அது சிறிதளவு அலைப்பு - அல்லல்- ஏற்படுமாயினும் அஞ்சும். அச்சத்தால் தன்னைக் காக்குமாறு தலையையும், கால்களையும் தன் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ளும். இதனைச் 'சுரித்தல்' என்பர் ஆராய்ந்தோர்.

ஏன் சுரிக்கிறது?

அஞ்சவேண்டிய ஒன்று அடுக்குமானால்.

எப்படிச் சுரிக்கிறது?

உணர்ச்சிகளை உள்ளடக்கி, எத்தகைய தாக்குதல் ஏற் பட்டாலும் கேடு நேரா அளவில் கல்லாக இருக்கும் ஓட்டினுள் சுரிக்கிறது.

எவற்றைச் சுரிக்கிறது?

நான்கு கால்கள், ஒரு தலை ஆய ஐந்தையும்.

இப்பொழுது ஆமையை அடக்கத்திற்குக் காட்டிய

பொருத்தம் புலப்படுகிறதா?

ஐம்புலன்களை அடக்கிக் காப்பதற்கு ஐந்துறுப்புக்களை அடக்கும் ஆமைபோலும் சான்று உண்டோ?