உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ்வளம் 9

தவற்றை மறைக்கும் மறையாகப் பொறை இருக்கிறது என்றாலும், பொறுமையின் சிறப்பை உவமை காட்டத் தவறி விடவில்லை.

பொறுமை சிறந்ததுதான்! ஆனால் அறிவு இல்லாதவரிடம் பொறுமை காட்டுவது நமக்கு நலம் தருமா? துன்பத்தை வலிய வாரிக்கட்டிக் கொள்வதற்காகவா பொறுப்பது?

இவ்வாறு சிந்திக்க வேண்டும்; எதிர் ஓட்டமாகச் சிந்திப்பது நல்லதே. தெளிவும் திருத்தமும் விளைப்பது அதுவே! நேராகச் சிந்திப்பதிலும் எதிராகச் சிந்திப்பதே சிந்தனையின் ஆழம்! நீர் நேரோட்டம் ஓட மீன் எதிர் ஓட்டம் ஓடவில்லையா?

காந்தியடிகள் ஒரு குதிரை வண்டி யில் போய்க் கொண்டிருக்கிறார்; வெறிகொண்ட வெள்ளையர்கள் அவரைக் கண்டு, வண்டியை விட்டுக் கீழே இழுத்துப் போட்டு அடிக்கின்றனர்; உதைக்கின்றனர். சாணத்தையும், நாறும் முட்டையையும் கல்லையும் அவர் மேல் வீசி எறிகின்றனர். பொறுக்கின்றார்; பொறுமை மலையாய் நிற்கின்றார்; வெறியர் மீது வழக்குப் போடுமாறு வேண்டுகின்றனர் பலர்; காந்தி அடிகளோ மறுக்கின்றார். ஏன்?

அறியாமல் செய்கின்றார்கள்; ஒருநாள் தாம் செய்தது தவறு என அறிவார்கள். அறிந்த பின்னர் திருந்த வழியுண்டாகும். குற்ற நடவடிக்கைகளில் இறங்கிவிட்டால் அவர்கள் திருந்துவதற்கு ஏற்படும் வாய்ப்பைக் கெடுப்பதாகிவிடும் என்று கருதினார். அவ்வெண்ணம் பாழயிற்றா? சாதாரண ‘ஆத்மா' வை மகாத்மா ஆக்கி வைக்கவில்லையா? இதுதான் பொறுமையின் பரிசு!

கோடரி கொண்டு ஒருவன் ஒரு மரத்தை வெட்டுகிறான்; அவனுக்கும் நிழல் செய்கிறது மரம்.

மண்ணைத் தோண்டுகிறான் ஒருவன்; அவனையும் தாங்கிக்கொண்டு இருக்கிறது நிலம். பொறுமைக்கு இவை எடுத்துக் காட்டுக்கள் இல்லையா?

மரத்தைப் போலவும் மண்ணைப் போலவும் மனிதன் இருக்க முடியுமா? உயிர்த் துடிப்பு உடையவன் தாங்க முடியுமா?

நமக்கு முடியாமல் இருக்கலாம். உலகுக்கு முடியாதென எப்படி நாம் முடிவு கட்டலாம்?

எறும்பு கடித்தால் எத்தனை பேர்கள் தாங்க முடியாமல் அழுகின்றனர்? தேளைப் பார்த்தே எத்தனை பேர் அடித்துத்