உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

79

துடித்து விழுந்து மயங்குகின்றனர்? இவர்களைக் கணக்கில் வைத்துக் கொண்டு இயேசு பெருமானை மதிப்பிடலாமா?

சிலுவையில் அறையப்பட்டும், "தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப் பன்னரிய பல பாடு படும்போதும் பரிந்தெந்தாய் இன்னதென அறிகில்லார் தாம் செய்வ திவர் பிழையை மன்னியும்" என்று முழுமுதல் இறைவனை வேண்டி நிற்க எவரால் முடியும்? முடிந்தால் ஒரே ஒரு இயேசு பெருமான் தான் புவியில் தோன்றியிருப்பாரா?

ம்

அருமையும் பெருமையும் வாய்ந்த பொறுமையை அனைவரும் பின்பற்ற முடியாமை ஏன்?

பொறுக்காதவன் இன்பம் அடைகிறான்; அற்ப இன்பம் தான் அடைகிறான்; அடுத்த வேளையிலே அடுத்த நாளிலே துன்பம் உண்டாக்கக்கூடிய இன்பந்தான் அடைகின்றான். ஆனால் அவன் அடையும் இன்பம் உடனுக்குடன் வந்து விடுகின்றது. பொறுமையின் இன்பம் - நன்மை - பொறுத்துத்தான் வருகின்றது. அது வரும்வரை காத்திருக்கப் பெரும் பாலோரால் முடிவது இல்லை.

-

அடுத்த வேளையில் கிடைக்கும் அல்வாவைப் பார்க்கிலும் உடனுக்குடன் கிடைக்கும் சீடை உருண்டையைச் சிறுவர்கள் விரும்புவது இல்லையா? மறுநாள் கிடைக்க இருக்கும் பத்து ரூபாய்களைப் பார்க்கிலும் கைமேல் கிடைக்கும் பத்துக் காசு பெரிதாகத் தோன்றவில்லையா? இத்தகு இளையர் மனநிலை போன்றதுதான் பொறுமை இல்லார் நிலைமையும்.

"என்னைப் பற்றிப் புறங்கூறினான்; விடுவேனா; நான் ஊருக்கே பறையடித்துவிட்டேன்” என்று மகிழ்பவர் மிகுதி.

“என்னை அடிக்க அவன் கையைத் தூக்கினான்; அக்கையை ஒடித்து அவன் மறு கையிலே தந்து விட்டு வந்தேன்" என்று செருக்குபவர் உண்டு.

"மேலதிகாரியிடம் என்னைப் புறங்கூறினான்; அடுத்த வாரமே அலுவலகத்துள் கால் வைக்காதவாறு செய்து விட்டேன்; தொலை தூரத்திற்குத் தூக்கி விட்டுவிட்டேன்; அவனும் அவன் குடும்பமும் மாற்றிச் செல்லப்பட்டபாடு!" இப்படி இறுமாப்போர் இல்லையா?

இவர்கள் கண்ட இன்பந்தான் என்ன? ஒரு நொடி இன்பம்; பிறர் துடிக்கக் காணும் இன்பம், பிறர் கண்ணீர்