உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

வடிப்பதைக் காணும் இன்பம், கண்ணுடையவன் கொள்ளும் இன்பமா? இவன் என்ன கண்ணீர் வடிக்கப் பிறக்காதவனா? கலங்காதிருக்கப் பிறந்தவனா?

இவ்வாறு என்னை ஒருவன் செய்திருந்தால் நான் என்ன பாடுபட்டிருப்பேன் ; என் குடும்பம் என்ன பாடுபட்டிருக்கும் என்று எண்ணும் நெஞ்சம் உண்டானால் று வ்வாறு மனஞ் செருக்கிப் பேசவும், சிறு செயல் புரியவும் கூடுமா?

எவனொருவன், பிறனொருவன் செய்த தவற்றைப் பொறுக்காமல் துன்புறுத்தப் போகின்றானோ, அவன் தன் மனத்துள், "உன்னைத் துன்புறுத்துமாறு ஏவும் உணர்ச்சி எதுவோ, அவ்வுணர்ச்சிக்கு நானும் ஒருநாள் ஆட்படுவேன்" என்று நினைவானே ஆயின் பொறுமையைப் போற்றியே தீர்வான்.

அடங்காக் கோபம் கொள்கிறான் ஒருவன். அவன் அடுத்தவனுக்கு அழிவு செய்வதன்முன், தானே அழிவான், தீக்குச்சி தான் மற்றதை எரிக்கு முன், தான் அழிந்துவிடாதா? மற்றவை எரியாது தப்பினாலும் அது தப்புமா? இதனை எண்ணியேனும் பொறுமை காட்டலாமே!

கட்டைகளை அடுக்கி, நெருப்பு மூட்டி அதன் மேல் ஒருவன் படுத்துக்கொள்ளலாமா? அவ்வாறு படுத்தால் எத்தனை மணி நேரம் இன்பங் காண்பான்? ஆனால் கட்டைகளை இழைத்துச் செவ்வை செய்து கட்டிலாக்கிப் படுப்பதில் தாடக்கத் துன்பம் இருக்கலாம். இதற்காகச் சுட்டெரிக்கும் கட்டையை விரும்பி, கட்டிலை வெறுப்பார் உண்டா?

பொதுவாகச் சிலரால் பொறுமையாயிருக்க முடிகின்றது. இத்தகையாரும் பகைவரிடம் பொறுமை காட்டுகின்றனரோ? தனக்குத் துன்பஞ் செய்தவர்களைப் பொறுப்பதே பொறுமை. அவர்களும் இன்பம் உறவேண்டும் என்று எண்ணுவதே போற்றத்தக்க பொறுமை. துன்பஞ் செய்தார்க்கும் இன்பம் இடையறாது செய்வதே தலையாய பொறுமை!

"தம்மை இகழ்ந்தாரைத் தாம் பொறுத்துக் கொள்வதுடன், எம்மை இகழ்ந்த இக் குற்றத்தால் இவன் துன்புறுவானே என்று வருந்துவது சான்றோர் இயல்பு" சான்றோர் இயல்பு" என்று சாற்றுகின்றது நாலடியார்.இச் சான்றோருள் ஒருவராக இருக்க ஏன் ஒவ்வொருவரும் முயலக்கூடாது?