பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியும் காரைக்கால் அம்மையாரும் பழைய தமிழ் இலக்கியங்களில் இன்று நமக்குக் கிடைத் துள்ள காப்பியங்களில் மிகப் பழமையானது சிலப்பதிகாரம். இது இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியது என்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனவே, இதனைத் தமிழில் தோன்றிய முதற்காப்பியம் என்று கூறலாம். பெரியபுராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்தவர் என்று தெரிகிறது. இவருடைய காலம் 12-ஆம் நூற்றாண்டு. பெரியபுராணத்திற்கு பிறகு 20-ஆம் நூற்றாண்டுவரை பெருங்காப்பியம் என்று சொல்லத் தக்கது எதுவும் தோன்றவில்லை. எனவே முதற்காப்பியம் என்று சிலம்பையும், கடைசிக் காப்பியம் என்று பெரியபுராணத்தையும் கூறலாம். இவ்விரண்டு காப்பியங்களிலும் பேசப்பெறும் இரண்டு பெண்மணிகளைப் பற்றி இங்கு ஆராயலாம். கண்ணகி சிலம்பு முழுவதும் வியாபித்து இருக்கிறாள் என்பது உண்மைதான். இதற்கு மாறாக பெரியபுராணத்தில் வரும் காரைக்கால் அம்மை யார் வரலாறு 53 பாடல்களில் அடங்கும். என்றாலும் இவ் இரு வரலாறுகளும் வியக்கத்தகுந்த ஒற்றுமையைத் தம்முள் கொண்டு விளங்குகின்றன. இந்த இரண்டு பெண்மணிகளும் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். வணிகர்கள் என்று கூறியவுடன் ஏதோமளிகைக்