பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அ.ச. ஞானசம்பந்தன் அத்தகையது என்று மன இயலார் கூறுகின்றனர். எனவே அடிகள் அதனை மனத்துட் கொண்டு புகார் நகரத்து மகளிர் கண்ணகி வடிவையும் திண்மையையும் புகழ்வதோடு மட்டு மில்லாமல், தம்மால் தொழத்தகுந்தவள் அவள் என்று வணங்கு கிறார்கள் என்றும் பேசுகிறார். மாதரார் தொழுது ஏத்த’ ஏத்தினார்கள் என்று மட்டும் கூறினால் அந்தப் பாராட்டு முகமனாகக் கூட அமைந்துவிடலாம். அதனாலேயே தொழுது ஏத்தினார்கள் என்று அடிகள் பேசுகிறார். இங்கே கண்ணகி யிடம் இரண்டு சிறப்புக்கள் ஈடு இணையற்ற முறையில் விளங்கக் காண்கிறோம். அவருடைய ஒப்பற்ற வடிவழகில் ஈடுபடுகின்ற கோவலன் அவளுடைய மனத் திண்மையை இறுதி வரை அறியாதவனாகவே இருந்துவிட்டான். எவ்வளவு சிறந்தவர்களாயினும் பிறந்த ஊரில் பெயரெடுப்பது கடினம். அந்தச் சிறப்பையும் கண்ணகி பெற்றுள்ளாள் என்பதை அறிவிக்கவே மாதாரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குனத் துக் காதலாள் என்கிறார் அடிகள், காதலாள் என்பதால் யாவரிடத்தும் மாறுபாடின்றி அன்பு பாராட்டும் இயல்பினாள் என்பதையும் பெறவைத்து விட்டார் அடிகள். இத்தகைய ஒரு பெண்ணுக்கு இன்ப வேட்கையிலேயே பொழுதைக் கழிக்கும் ஒருவன் மணமகனாக வாய்த்தது வருந்தத்தக்கதே ஆகும். கோவலனைப் பொருத்த மட்டில் மாபெரும் கலைஞன் ஆதலானும், பெரிதும் உணர்ச்சி வசப்படுபவனாதலானும், கலைச்செல்வம் உள்ள ஒருத்திதான் பொருத்தம் உடையவளாக ஆதல் கூடும். கண்ணகியைப் பொருத்தமட்டில் அறிவின் துணைகொண்டு வாழ்ந்தாளே தவிர உணர்வின் துணை கொண்டு வாழ்ந்தாளில்லை. கோவலன் மனநிலையையும் கண்ணகி மனநிலையையும் முதல் இரவின் சந்திப்பின்போது அடிகள் ஒருவாறு விளக்க முற்படுகிறார். அழகைப் பாராட்டுவதில் கைதேர்ந்தவனும் கலைஞனுமாகிய கோவலன்,