பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானைமேல் ஏறுகிறான். அந்த நிலையில் ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்த திருமாலை வழிபடவேண்டும் என்று அவன் நினைக்கவில்லை. யானைமேல் ஏறிவிட்ட பிறகு திருமால் கோயில் பிரசாதத்தை சிலர் ஏந்தி வருகின்றனர். அதைப் பெற்றுக் கொண்ட அவன் சிவபெருமானுடைய திருவடிகளின் அடையாளமான வில்வத்தைத் தன் உச்சந்தலையில் தரித்திருப்பதால் திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் தோளில் தரித்துக் கொண்டான் என்று பாடுகிறார் இளங்கோ.


'நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி

உலகு பொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி

மறஞ்சேர் வஞ்சி மாலையொடுபுனைந்து

இறைஞ்சாச் சென்னி யிறைஞ்சி வலங் கொண்டு

(கால்கோட் காதை 57)

...........................

...........................

கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன்

குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென

ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன்

சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத்

தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்

வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்

ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத்

தாங்கினனாகி....

(கால்கோட் காதை 60 - 67)


இப்பகுதியைப் படிக்கும் பொழுது இவ்வளவு விரிவாக இதனைப் பாடுவது தேவையா என்ற ஐயம் மனத்தில் எழுகிறது. செங்குட்டுவன் சிறந்த சிவ பக்தனாக இருக்கலாம். எனவே அவன் சிவபெருமான் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு யானை மேல் ஏறினன் என்று பாடுவது பொருத்தமுடையதாகும். ஆனால் பின்னர் காட்டிய பகுதி நடைபெற்றிருப்பினும் சொல்ல