பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@enti":::" ozessir suunn argis? 131 உள்ள பல பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. உதாரணத்திற்கு ஒரு பாடல் வருமாறு : நீயுலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடைய தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி விடஅரவம் மேலாட மிக்கு. (57) இரண்டாம் நூற்றாண்டிலும் பன்னிரண்டாம் நூற்றாண் டிலும் வாழ்ந்த இளங்கோவும், சேக்கிழாரும் பெண்களின் பெருமையை எடுத்துக் காட்டுவதில் தந் நிகரற்று விளங்கு கின்றனர். மேட்டுக்குடியில் பிறந்தவர்களும் இல்லறத்தில் புகுந்தவர்களும் வீடு பேற்றை அடைய முடியாது. அடைவதாக இருப்பினும் பல பிறப்புக்கள் எடுக்க வேண்டும் என்று இடைக் காலத்தில் புகுந்த கொள்கையைத் தகர்த்து இருபெரும் மகளிரைப் படைத்துள்ளனர். பெருஞ் செல்வத்தில் பிறந்து பெருங்குடியில் புகுந்து இல்வாழ்வில் ஈடுபட்டாலும் குறிக்கோள் உடையவர்கள் ஒரே பிறப்பில் அக்குறிக்கோளை எய்தலாம் என்பதை அறிவுறுத்தும் இரு கலங்கரை விளக்குகள் ஆவர் கண்ணகியும் காரைக்கால் அம்மையும். -