பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோவும் திருவள்ளுவரும் இளங்கோவும் திருவள்ளுவரும் தமிழ்நாட்டுக்கு இரு கண்கள் போன்றவர்கள். அந்தக் கண்கள் என்ற உவமையைத் தான் நினைந்து நினைந்து பார்க்கிறேன். கண்கள் இரண்டா யினும் அவை காண்பது ஒன்றை அல்லவா? அதுபோல, வள்ளுவனும் இளங்கோவும் மாறுபட்ட பொருளை மாறுபட்ட கோணத்திலே நின்று காண்பதில்லை. ஒன்றையேதான் ஒரே கோணத்தில் நின்று கண்டனர். சில சமயங்களில் கண்களுக் குள்ளே வேறுபாடு இருக்கலாம். என் போன்றவர்களுக்கு அது தெரியும். ஒரு கண்ணுக்கு 5.7 கண்ணாடியும், மற்றொரு கண்ணுக்கு 27 கண்ணாடியும் போட்டுக் கொள்ளுகிறோம். அப்படிப் போடப்பட்டாலும் காணப்படும் பொருள் இரண்டாகக் காட்சி அளிப்பதில்லை. அதேபோல வள்ளுவன் ஒன்றே முக்கால் அடியால் குறள் எழுதினாலும், இளங்கோ ஆயிரக்கணக்கான அடிகளினாலே நிலை மண்டில ஆசிரியப்பா எழுதினாலும், இருவரும் காண்பது ஒன்றையேதான். ஒருவர் நீதி நூலாக எழுதினார் மற்றவர் வரலாற்றுக் காப்பியமாக அமைத்தார். எனினும் இருவரும் கண்ட காட்சி ஒன்றேதான். சிலப்பதிகாரம் ஒசைப் பாட்டாகவும் இசைப் பாட்டாகவும் அமைந்தாலும், கற்பனையோடு கலந்து காணப்பட்டாலும், கற்பனையற்ற கட்டளைகள்ாகத் திருக்குறள் காணப்பட்டாலும் இரண்டும் காண்பது ஒன்றையேதான்.