பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 155 கிறோம். எனவே, "சொல்லுக சொல்லிற் பயனுடைய” என்ற குறளையும் சொல்லுக சொல்லைப் பிறிது ஒர் சொல் அச் சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து என்ற இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு எவ்வளவு சிறந்த முறையில் கண்ணகியின் சொற்செல்வத்தைக் காட்டுகிறார் இளங் கோவடிகள் "தேராமன்னா”என்று தொடங்கும் முதற்பகுதியை நினைந்து பார்க்கவேண்டும் ஒருவன் தவறிழைத்தால் இரண்டு வகையிலே எடுத்துக் காட்டலாம். நீ இந்தத் தவறைச் செய்தாய் என்று சொல்வது நேரடி முறை, நாங்கள் இத்தகைய தவற்றைச் செய்ததில்லை என்று சொல்லுவது இன்னும் கொஞ்சம் கெளரவமான மறைமுக முறை. இரண்டாவதான மறைமுக முறைதான் பெரியவர்கள் செய்கின்ற காரியம். நீ இந்தக் குறையைச் செய்தாய் என்று சொல்லுவதைக் காட்டிலும், இப்படிப் பட்ட பிழையைப் பெரியோர்கள் செய்வதில்லை என்று சொல்லு வதுதான் இம் முறை. சோழ நாட்டில் இம்முறையில் நீதி வழங்கப்பட்டது என்று சொல்லும்பொழுது, பாண்டியநாட்டில் அது அவ்வாறு இல்லை என்பதைக் குறிப்பதாகும். புறவு ஒன்றின் பொருட்டாகத் துலைபுக்க நாடு என்னுடையது'என்னும் பொழுது இங்கே மனிதர்க்கே இரக்கங் காட்டுவார் இல்லை என்ற குறிப்பைக் காட்டுகின்றது. இனி அடுத்தபடியாக, கணவனுடைய பெருமையெல்லாம் வரிசையாகச் சொல்லிக்கொண்டு வரும் முறையில் சங்கப்பாடல் நினைவுக்கு வருகிறது. எய்யாதாகும் எஞ்சிறு செந்நாவே'என்றுபாடுகிறார் ஒரு புலவர் இந்தச் சிறிய நாக்கு இப்படியெல்லாம் பொய் பேசாது”என்கிறார். அதற்கு உரை எழுத வந்தவர் பொய் பேசாத நாக்கு ஆகலின் செந்நா’ என்று சொன்னார் தற்புகழ்ந்தாராகாமையின் சிறுநா என்றார் என்று கூறுகிறார். கண்ணகி வழக்குரைத்த பகுதி சிலப்பதிகாரத் திலேயே ஒப்புயர்வற்ற பகுதியாகும்.