பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 அ.ச. ஞானசம்பந்தன் கோவடிகள் பேசுகின்றார். பாண்டியன் கேட்டது ஒரு கேள்வி. அதற்குக் கண்ணகி பதில் சொல்லுகின்ற முறையில் சொற் செல்வத்தைக் காண்கிறோம். "யாரையோரீமடக்கொடி?”என்ற ஒரு கேள்விக்கு எத்தனை எத்தனை விதமாகத்தான் விடை யிறுக்கப்படுகிறது. எத்தனை எத்தனை கேளாதவினாக்களுக்கு அதிலே விடை கிடைக்கிறது! அதைத்தானே சொற்செல்வம் என்று சொல்லுகின்றோம். செல்வம் என்பதன் பொருளென்ன? வேண்டுமானவற்றை வேண்டுமானபோது வாங்குவதற்கு வாய்ப்பாக இருக்கின்ற ஒன்றுதானே செல்வம். உண்மையான செல்வம் எது? ஈகின்ற சக்தியுடையதாக இருத்தல் வேண்டும். பிறர் துயரம் களையக் கூடியதாக இருத்தல் வேண்டும். எந்தத் தேவையோ அந்தத் தேவைக்குப் பயன்படக் கூடியதாக இருத்தல் வேண்டும். இங்கே பாண்டியனுடைய தேவை யாது? அவனுடைய மனத்தில் எழப்போகும் பல சந்தேகங்களையும் ஒன்றொன்றாகக் கேட்கப்போகின்றான். உன் கணவன் யார் என்பான்? பின்பு அவன் ஏன் மதுரை வந்தான் என்பான்? அவ்வாறு கேட்டுக் கேட்டுக் கொடுத்தால் அது உண்மையான செல்வத்துக்குச் சிறப்பாகாது. உண்மையான செல்வம் கேளாமலே பயன்பட வேண்டும். கண்ணகியினுடைய சொற்செல்வம் எப்படிப் பயன் படுகிறது? வேண்டிய இடத்திலே பயன்படுகிறது; தக்க முறையிலே பயன்படுகிறது; பாண்டியனுடைய ஐயத்தைப் போக்கப் பயன் படுகிறது. ஆகவே, அவள் பேசியதை வெறுஞ் சொல் என்னாமல் சொற்செல்வம் என்கிறோம். ஆனால், அவள் பேசியதால் பயனில்லை என்றால், அது வெற்றுரையாக ஆய்விட்டிருக்கும். சொல்லுக சொல்லில் பயன் உடைய’ என்று சொல்லிவிட்டாரே வள்ளுவர். ஆகவே, கண்ணகியினுடைய சொற்செல்வம் பயனுடை யதாய், வேண்டத்தக்க விடத்தில் பயன்படுவதாய், பாண்டி யனுடைய ஐயத்தைப் போக்கக் கூடியதாய் அமைவதைக் காண்