பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 15 மண்களி நெடுவேள் மன்னவற் கண்டு. கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த தண்டமி ழாசான் சாத்தன் இஃது உரைக்கும் காட்சிக் காதை (64-66) கண்ணகியின் வரலாற்றைச் செங்குட்டுவன் அறிந்தால் தான் அவளைப் போற்றி வழிபடக் கோயில் எடுக்க முடியும். அது நடைபெற வேண்டுமானால் ஒற்றர் முதலியவர் போல் அல்லாமல் பெரும்புலவன் ஒருவன் கண்ணகி வாழ்க்கையில் அதுவரை நடந்ததை உரைக்க வேண்டும். இதனைச் செய்வதற்காகவே தண்டமிழ் ஆசான் சாத்தன் உடனிருந்து விளக்கம் தந்ததாக இளங்கோ காப்பியத்தை அமைக்கிறார். தண்டமிழாசானைப் பயன்படுத்தி, தமக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்துக் கொண்ட இளங்கோ, சாத்தனுக்கு இவ்வரலாறு எவ்வாறு தெரிந்தது என்பதை விளக்க முற்பட வில்லை. காப்பியக் கட்டுக்கோப்புக்கு இதனுடன் நிறுத்திக் கொள்வதே போதுமானது என்று புலவர் நினைத்திருக்கிறார். இதனைப் புரிந்து கொண்ட பிறகு பதிகத்துக்குச் செல்வோ மானால் பதிகம் பாடிய ஆசிரியன் எந்த அளவு கற்பனை செய்துள்ளார் என்பதையறிய முடியும். கோட்ட வாயிலில் இருந்த இளவலாகிய இளங்கோவிற்கு இவ்வரலாறு எவ்வாறு தெரிந்தது என்பதைச் சொல்ல வேண்டிய சூழ்நிலை பதிகவாசிரியனுக்கும் ஏற்பட்டுவிட்டது. முன்பின் யோசியாமல் காப்பியத்தில் கண்ட அதே சூழ்நிலையைப் பதிகத்தில் உண்டாக்குகிறான். மலை வளங் காண வந்த மன்னனிடம் வேடுவர்கள் பேசியது பொருத்த மாக இருக்கிறது. ஆனால் அதே வேடுவர் கூட்டம் மலையை விட்டுக் கீழிறங்கி குணவாயிற் கோட்டம் வந்தடைந்து ஒரு சம்பந்தமும் இல்லாத இளங்கோவிடம் தாம் கண்டதைக் கூறினர் என்று பதிகவாசிரியர் கூறுவது நகைப்பிற்கு இடந்தருவதாகும். மன்னனைக் காண வந்த குடிமக்கள் அவனிடம் கூறுவது வேறு. ஆனால் மலையை விட்டுப் பிரிந்து இராத அந்த வேடுவர்கள்