பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அ.ச. ஞானசம்பந்தன் с вёха в ав: * * * * а н д 3: a * * * திருவாயுஞ் செய்ய கரியவனைக் காணாத கண்னென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்னே’ (ஆய்ச்சியர் குரவை 36) “சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே’ (ஆய்ச்சியர் குரவை 35) 'நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா என்னா நாவென்ன நாவே' (ஆய்ச்சியர் குரவை 37) இத்துனை அழுத்தமாக நாராயணன் புகழைக் கூறியதால் இவரை வைணவர் என்று கூறிவிடலாமா? இவை பாத்திரங் களின் பேச்சு என்பதை மறந்துவிடலாகாது. ஆய்ச்சியர்களின் தெய்வம் கண்ணன். இங்கு பாடுபவர்களும் ஆய்ச்சியர் தாம். எனவே இங்கு அழுத்தமாகத் திருமால் பெருமை பேசப்படுகிறது. பாத்திரங்களின் உரையாடலை வைத்துக் கொண்டு இதுதான் நூலாசிரியனின் உள்ளக்கிடக்கை என்று கூறுவது பொருத்தமற்ற தாகும். ஒருவேளை ஆய்ச்சியர் குரவையே நூலின் வளர்ச்சிக்குத் தேவையில்லாமல் இருந்து எப்படியாவது இதை நூலினுள் இடம்பெறச் செய்யவேண்டும் என்று ஆசிரியர் பாடியிருப் பாரேல் இவ்வாறு எண்ணுவதில் தவறே இல்லை. நூலின் பிற உறுப்புக்களோடு தொடர்புடையதாய், பிரிக்க முடியாததாய் (Integral part) 2-6ft 67 L16535 ஆய்ச்சியர் குரவை, எனவே இத்தகைய ஒரு பகுதியைப் பாட வருகின்ற ஆசிரியர் அதில் தம் கருத்திற்கு இடந்தந்தார் என்று கூறுவது பொருத்தமற்றதாகும். மூன்றாவதாக உள்ள குன்றக்குரவை வஞ்சிக் காண்டத்தில் இடம் பெற்றுள்ளது. இது மலைவாழ் மக்கள் தங்கள் குல தெய்வமாகிய முருகனைப் போற்றும் பகுதியாகும். தெய்வம் பராஅயது என்ற பகுதியில் முருகன் புகழ் விரிவாகப் பேசப்படு