பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அ.ச. ஞானசம்பந்தன் பிறப்பிலேயே வீடு பேற்றை அடையச் செய்ய வேண்டுமென்ற உறுதிப்பாட்டோடு ஜாக்கிரதையாக நூலில் பாடிக் கொண்டு செல்கிறார். - திருமணம் நடைபெற்றது. ஏதோ சில ஆண்டுகள் கணவனும் மனைவியுமாக வாழ்ந்தார்கள். அப்படி வாழ்ந்தபோது கூட, கண்ணகி திருமண வாழ்வில் முழு மனத்தோடு ஈடுபட வில்லை என்பதைக் காட்ட இளங்கோவடிகள் சில இடங்களைச் சுட்டுகிறார். சிலப்பதிகாரத்தைப் படிப்போர் இதனை அறிந்து கொள்ள முடியும். திருமணமான முதல் இரவு, கணவனும் மனைவியும் சந்திக்கிறார்கள். மலையிடைப் பிறவா மணியே என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ (மனையறம் படுத்த காதை 77, 79) என்று கோவலன்தன் மனமகிழ்ச்சியைப் பலவாறாக வெளியிடு கிறான். ஆனால் இளங்கோவடிகள் அந்தப் பெண்ணினிடத்தில் ஒரு கடுகளவு கூட எதிர்ச் செயல் (Reaction) வந்ததாகக் காட்டவே இல்லை. இல்லற வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியாத ஒரு பெண்ணாக இருந்தாள். அப்படிச் சொல் வதனாலே எந்தவிதமான தவறும் ஏற்பட்டுவிடவே இல்லை. அவளைப் பொறுத்தமட்டில் வாழ்ந்தாள் கணவனுக்காக. அவ்வளவுதான். ஆக அவள் அதில் ஈடுபட்டாளா என்று சொல்வதற்குச் சான்றேயில்லை. இதையெல்லாம் மனத்தில் கொண்டு இளங்கோவடிகள் கோவலன் கூறியவற்றை உலவாக்கட்டுரை பல பாராட்டி என்று பாடுகிறார். உலவாக் கட்டுரை என்பதன் பொருள் ஆழ முடைய இத்தகைய பல சொற்களைக் கூறி அவன் பாராட்டியும்