பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 61 அவள் மனத்துயர் அனைத்தையும் பிறர் காணாதவாறு செய்தது இந்நகையும் முறுவலுமாம். அவ்வாறானால் பின்னர் ஒர் இடத்தில் அவளே என் வாய் அல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்த (கொலைக்களக் காதை 80) என்று கூறுகிறாளே! அந்நிலையில் பொய்மையான முறுவல் என்று அவளே கூறிய பிறகு நலங்கேழ் முறுவல் என்று ஆசிரியர் கூறுவது சரியா என்ற வினாத் தோன்றும் அவர்கள் வாழ்வு கருகிப் போனதைப் பற்றி உண்மையில் பெருங்கவலை கொண்டவர்கள் கோவலனைப் பெற்றவர்களாவர். தங்கள் மகனால் ஒரு பெண்ணின் கதி இவ்வாறாயிற்றே என்ற துயரத்தோடு வரு கின்ற அவர்களை முறுவலுடன் எதிர்கொண்டு அழைத்தாள் கண்ணகி, தங்கள் துயரத்தைப் போக்க அவள் போர்த்துக் கொண்ட முறுவல் இது என்று அவர்கள் வருந்தினார்கள். வாய் அல் முறுவல் என்றது மாசாத்துவான் மனநிலைப்படி பொருள் கொண்டதாகும். எனவே சுகதுக்கங்களை விருப்பு வெறுப்புக் களைச் சமமாக பாவிக்கும் சம நோக்கை இளமையிலேயே பெற்றுவிட்டாள் கண்ணகி என்ற முறையில் அப்பாத்திரத்தை அடிகள் படைக்கிறார். மான அவமானங்களையும் இதே சமநோக்குடன் காண் பதோடு அல்லாமல் தன்னை அவமானம் செய்தவர்களைக் கூட மன்னித்து அன்பு பாராட்டும் பண்புடையவள் கண்ணகி என்பதை நாடுகாண் காதையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி மூலம் அடிகள் நிறுவுகிறார். கீழ்மக்கள் இருவர் கோவலன் கண்ணகியைப் பார்த்து இவர்கள் யாவர்'எனக்கேட்க கவுந்தியடிகள், இவர்கள் எம்மக்கள் என விடையளிக்கிறார். அக்கீழ் மக்கள் இருவரும் உம்முடைய மக்களாயின் எப்படி கணவன் மனைவியாயினர்'என வினவுகின்றனர். பெருஞ்சினங் கொண்ட கவுந்தியடிகள் அவர் களை நரிகளாக என்று சபித்துவிடுகிறார். சினத்தைத் தவிர்க்க