பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அ.ச. ஞானசம்பந்தன் கடற்கரையில் சென்று தங்கியவுடன் யாழ் மீட்டிப் பாட வேண்டும் என்ற எண்ணம் கோவலனுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. வசந்தமாலை என்ற தோழியிடம் இருந்த யாழை மாதவி தானே வாங்கிச் சுருதி சேர்த்து, “கோவலன்கை யாழ் நீட்ட அவனும் காவிரியை நோக்கினவும், கடல்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனம் மகிழ, வாசித்தல் தொடங்குமன்” (கா. வரி 1) என்று பாடுகிறார். அவன் வாசிக்கத் தொடங்குகின்ற வரையில் அவனுடைய மனமாறுபாட்டை அறியாதிருந்த மாதவி அவன் பாடி முடித்த வுடன் இவன் நிலை மயங்கினான்’ எனப் புரிந்துகொண்டாள். கற்றறிவும் கலையறிவும் உடைய மாதவி கோவலன் தன் நிலை மயங்கினான் என்றுமட்டும் உணர்ந்தாளே தவிர எவ்வளவு ஆழமாக அவன் மனம் உளைந்துள்ளான் என்பதை அறியத் தவறிவிட்டாள். இதனை அறிந்திருந்தால் உறுதியாக அவள் எதிர்ப்பாட்டுப் பாடி இருக்கமாட்டாள். உறுதியான மனநிலை படைக்காதவன் கோவலன் என்பதை அவனுடன் அத்துணை ஆண்டுக் காலம் பழகி ஒரு குழந்தையையும் பெற்றுவிட்ட மாதவி நன்கு அறிந்திருந்தாள். அடிக்கடி அவன் பொறுமை இழந்து, சினங்கொள்வதும், சில நாட்கட்கு அஞ்ஞாத வாசம் செல்வதும் அவள் அறிந்த ஒன்றுதான். எனவே வழக்கம்போல அவன் பிணங்கிக் கொண்டுள்ளான் என்று கருதிய அந்தப் பேதைப் பெண் அவனுடன் போட்டிபோடுகின்ற மனப்பான்மையில் பாடத் தொடங் கினாள். கோவலனுடைய மனம் குழம்பி இருந்த காரணத்தால் அவன் பாடல் பிறரால் அனுபவிக்கத் தக்க வகையில் அமைய வில்லை. மாதவிமட்டுமே அதனை ரசித்தாள் என்பதை ஆசிரியர் மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன் (கா.வரி - 1 என்று கூறிக் குறிப்பால் உணர்த்திவிட்டார்.