பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதனை மனிதன் இழுக்கிருன்-நல்ல மாட்டைப் போலே உழைக்கிருன் மணமகன் போலே மனிதரும்-அதன் மேலே ஏறிச் செல்கிருர், ஏழை வண்டி இழுக்கவே-நல்ல கோழை யென்றே நினைக்கிருர் ஏழையைக் கண்டால் மோழையும்-பாயும் என்பது எல்லாம் சரிதானே? நிலத்தில் நீரை வடிக்கிருன்-நாளும் நிலையில் லாமல் துடிக்கிருன். பலத்தைக் கொண்டே இழுக்கிருன்-பாழும் பணத்திற் காக உழைக்கிருன். காசுக்காக மாடானன்-மேலே கருணை செலுத்த மறுக்கிருர் நாசுக் காகப் பேசியே - அதில் நான்கு பணத்தைக் குறைக்கிருர் உயர்வு தாழ்வு நமக்கில்லை உலகின் மக்கள் நாமெல்லாம் உயர்வை உலகில் பெறவேண்டின் • உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல். மனிதனை மனிதன் இழுத்துத்தான்-இந்த மாநி லத்தில் மிழைக்கனுமோ புதுமை வண்டிகள் இருக்கையிலே-இந்தப் புன்மை தொடர்ந்து நடக்கனுமோ? குழ. கதிரேசன் 48